நல்தொரு வீணை செய்தே.!கவிதை ஜெசுதா யோ

நல்தொரு வீணை செய்தே
நலமாய் பேணும் உறவாய்
பூமியாய் தாங்கும் தலைவியாய்
பொறுமையின் சிகரமாய்
தலைவணங்க வேண்டியவள்
பெற்ற தாயையே
தாபம் தீக்கும் உலகமடா
பெற்றெடுத்த மகளையும்
மயக்கத்துடன் நோக்கும் கண்களடா

உடன் பிறந்தவளை
ஊரார் தூற்றும் என்றறிந்தும்
சரசம் செய்வதேனடா
காதல் மொழி பேசி
கசிந்துருகி நீயும் காதலியிடம்
காமம் செய்வதேனடா

நண்பி என்று வரும் போது
நயவஞ்சகமாய் நோக்குவது ஏனடா
நானிலம் முழுக்க பெண்ணென்று போற்ற
மானிட நீயேன் மதிகெட்டுப் போனாய்

நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது
நிலையறியாது தவிக்கிறது
எண்ணத்தில் ஏனோ தெரிகிறது
நல்லதொரு வீணை செய்தே
நலமாக மீட்காது பூமியில்
எறிவதேனடா..??

ஆக்கம் ஜெசுதா யோ