நாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏசீ. தாசீசியஸ் அவர்களின் பவள விழா 2016 நூல்அறிமுக விழா17.06.2018

பிரான்ஸில் 17.06.2018 அன்று நாடகர்,ஊடகர்,ஏடகர்,ஏசீ. தாசீசியஸ் அவர்களின் பவள விழா 2016 நூல்அறிமுக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது!
ஈழக்கூத்தன் ஏ.சீ.தாசீசியஸ் அவர்கள் மகிழ் பறை வரவேற்புடன் அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டார். பல்கலைஞானன் கு.பரா அவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார். மங்கள விளக்கை திருமதி ரகுநாதன் அவர்கள்,மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் அவர்கள்,ஈழத்தமிழ் விழி புனிதமலர் அவர்கள்,ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜன் அவர்கள் ஆகியோர் ஏற்றினார்கள்.
வரவேற்புரையை கெங்கேஸ் அவர்கள் வழங்கினார்.
நூல் பற்றிய ஆய்வுரையை கலாநிதி த.சர்வேந்திரா அவர்கள் நிகழ்த்தினார்.
எங்கள் தோழமை தந்தை மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் வாழ்த்திப் பேசும்போது ஈழத்து நாடகத் தந்தை என்று தாசீசியஸ் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
மற்றும் ஈழத்தமிழ் விழி பரா அவர்கள், மணிநாகேஷ்,எஸ்.கே.ராஜன்,சுதன்ராஜ்,அன்ரன் பொன்ராஜ்,பாலசுகுமார்,ஆகியோர் அவரின் ஆளுமைகள் பற்றி சிறப்புற பேசினார்கள்.
ரி.ரி.என்.தொலைக்காட்சியில் அவர் பணிப்பாளராக இருந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தாசீசியஸ் அவர்களுடைய கோபம், அன்பு,பண்பு,நிர்வாகத்திறன் பற்றி கலகலப்பாக பேசினார்கள்,
ஏற்புரை வழங்கிய ஏசீ.தாசிசீயஸ் அவர்கள் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார் அவர் பேச்சில் நேர்மைத்தன்மை மேலோங்கி நிற்பதையும், ஒரேநேர்கோட்டில் அவர் பயணிப்பதையும் நிறையவே அவதானிக்க முடிகிறது.!
நிகழ்வை T.ஜஸ்ரின்,கொலின்ஸ்,இருவரும் தொகுத்து வழங்கினார்கள். ஒலி அமைப்பை அருள் வழங்கியிருந்தார்.
இவ்நிகழ்வை பாரிஸ் கலையரசு கூடல் அரங்கு,வளரி,நேயாலயம், இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அன்பால் அரங்கு நிறைந்திருந்தது!
பிரமாண்ட மான மனிதர்களுக்கு பிரமாண்டமான மண்டபங்கள் தேவையில்லை என்றும் தெரிந்திருந்து! (K.P.L) 17.06.2018