நாட்டியமயில்&நெருப்பின் சலங்கை 2019.

சுவிசர்லாந்தின் திருகோணேஸ்வரா நடனாலாயத்தையும் நடனக்கலை வித்தகர் ஆசிரியை.திருமதி மதிவதனி அவர்களையும் அறியாதவர் சிலரே.

ஆசிரியை.மதிவதனியால் மாணவி.மதிவதனிக்கு ஓர் இனிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வருடத்துக்கான நாட்டியமயில் &நெருப்பின் சலங்கை 2019 நிகழ்வுக்கான நடனத்துக்கு பாடல்வரிகளை எழுதும் வாய்ப்பு.

ஈழத்தின் போரும் வரலாற்றின் சிறப்பும் புலம்பெயர் தமிழர்களின் கடமைப்பாடும் என்ற ஒழுங்கில் வரிகள் அமையவேண்டுமென்றார்.

எழுதிமுடித்த போது 19 வருடங்களாக என் கால்கள் பதியாத பூமியை இதயத்தால் தொட்டுவந்தேன்.

இந்தப்பாடலுடன் கூடிய நடனம் இந்த வருடத்துக்கான நெருப்பின் சலங்கை விருதினை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியுடன் கூடிய செய்தி.

நடன ஆசிரியை திருமதி .மதிவதனி அவர்கள் ஈழத்தின் திருகோணமலைப் பிராந்தியத்தில் 
புகழுடன் விளங்கும் புனிதமரியால் கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றியவர்.அந்தக்கல்லூரியில் மாணவியாக இந்த மதிவதனி.

காலவோட்டத்தில் இருவரும் சுவிசர்லாந்தில்.

ஆசிரியை நடனத்துறை நான் எழுத்து துறை.

சுவிற்சர்லாந்தின் புதியவார்ப்பு நிகழ்வில் இருவருமே ஒரே மேடையில் கௌரவிக்கப்பட்டோம்.

இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

இன்று எமது திருகோணமலை மண்ணுக்கும் ,கல்லூரிக்கும் எம்மால் இயன்ற பெருமை.

எத்தனை திறமைகள் எம்மிடமிருந்தாலும் பக்கசார்பற்று நடுநிலமையுடன் வாய்ப்புகளை வழங்குகின்ற மனிதர்கள் அருகிவாழ்கின்ற சமூகத்தில் வாழ்வதனால் நமது திறமைகளை வெளிக்கொண்டுவரும் மனிதர்களை நாம் ஆயுளுக்கும் மறக்காமல் இருப்பதே சிறப்பு.!

இன்று என் ஆசிரியை மதிவதனியும் அந்நிலையில் எந்தன் இதயவறையில்.

வளைந்து நெளிந்து வாய்ப்புகளை பெறுவதை விட இழிவுநிலை வேறில்லை என்பது எனது கருத்து.நம்மை நாம் செப்பமிட செப்பமிட என்றொ ஒருநாள் உரிய இடத்தில் ஒளிபெறுவோம்.

நன்றி.மதிவதனி(வாணமதி)