நான் காணவில்லை….!


கனவுக்குள் கரைந்து
போன நினைவுகளை
நான் காணவில்லை..!!!
கற்பனையின் சிகரமாய்
பிறக்க ஆசைப்பட்ட
உணர்வுகளும் சாகவில்லை..!!
உயிர்பித்த தாய்மையின்
உன்னதம் தெரியாது
அனாதை இல்லத்தில்
அடங்கி கிடப்பதை
நான் காணவில்லை..!!
ஊனமாய் உபசரித்த
மனதினை கூச்சலிட
வைத்த நாகரிகங்களையும்
காணவில்லை இன்று..!!

பசி என்று
வந்தால் ருசியாக
உணவழித்த இதயங்கள்
இரும்பு பூட்டு போட்டு
தொலைந்துவிட்டார்கள் இன்று..!
எங்கு போனது
இரக்க குணம்
அரக்கனும் கொஞ்சம்
இரக்கம் கொண்டதால்தான்
சிலருக்கு இளமையிலும்,
முதுமையும் மரணம்
வரக் காரணம்
எனலாம் மனிதனுக்கு
ஏங்கு போனதே
எனத் தெரியவில்லையே
இரக்கம்..!!
நான் காணவில்லை
வடகொரியா ஏவுகணை
கொண்டு மிரட்டுவது
போல,பிச்சை
எடுப்பவனையும் கீழ்தரமாய்
பார்ப்பதற்க்கு
நாங்கள் என்ன பஞ்சத்தில்
வாழ்ந்தாலும் நெஞ்சத்தில்
உழைத்து உண்ணத்தான்
பிச்சை கோட்டுவந்தோம்
இதுவும் எங்களுக்கான
திருப்தியான உழைப்பு
என எண்ணி..!!
காணவில்லை இரக்கமும்,
உறக்கமும் அரக்கன்
வந்து நுழைந்ததால்…!!!

பொத்துவில் அஜ்மல்கான்