நாற்காலி


நாலு கால் இருந்தும்
நடக்க முடியாதவன்.
நடப்பவரையும்
நடக்க முடியாதவரையும்
தாங்கும் தைரியசாலி,

பாராளமன்றுக்குள்
மந்திரிமார் கரங்களில்
காத்திரமான ஆயுதம்.
வசிக்கும் இடங்களைப்
பொறுத்தே என் பெறுமதி.

என் மீது அமர்பவர்
தரத்தால் உயர்வர்
ஆளும் கட்சிக்கும்
எதிர்க்கட்சிகும்
என்னால் என்றும்
பெரும் குளப்பம்.

அடிக்கடி ஆசைப்
படவைத்து
அமர்களம் அடிதடி.!
சாம்ராச்சியம் பல
அழிவதற்கு நானும்
பாத்திரவாளி.

குற்றச் சாட்டுக்கள்
பல என்னில்
இருந்தாலும்
நீதி வழங்குவோரும்
என்னில் தான் அமர்வர்
அதனால் நானும்
அதிசயப் பிறவியாவேன்..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி