நின்னை சரணடைந்தேனடி


உன்னை கானவென்றே நானும் எந்தன்
உயிரை கையில் எடுத்து ஓடிவந்தனடி.
என்னையும் எந்தன் நிலையையும் நீ,
எள்ளளவும் நினையாது கோபித்தாயோ.
கண்ணைக் கசக்கியபடி நீயும் கனநேரம்
காத்திருந்ததாக கண்டவர்கள் கூறினாரடி.
அன்னைவேளாங்கன்னி கோவில் நோக்கி
அழுதபடி நீயும் சென்றதாய் அறிந்தேனடி.
தன்னை நீயும் வருத்திவிடுவாயோ என
தாளாத மனம் கிடந்து வீணே தவிக்குதடி..
புன்னை மரத்துப் பூங்குயில் சோடி கண்டு
புழுங்கி அழுகிறது என்இதயம் அறிவாயோ
மண்ணைத் தடவி மெல்ல நீ நின்றிருந்த
மணிக்கொலுசுப் பாதச்சுவட்டை ,தொட்டு
நின்னை சரணடைந்தேனடி பைங்கிளியே
நிலவரமறியாது நிற்கிறேன் பைத்தியமாக
இலவு நேசன்