நிறம் இழந்த பூக்கள் „!கவிதை ஜெசுதா யோ

 

நிறம் மாறும் பூக்கள் போல
மனம் மாறும் மனிதர்கள்
நாளும் பொழுதும் நடக்கும் நாடகங்கள்
அதில் நசுங்கும் நெஞ்சங்கள் ஏராளம்

இன்று உள்ளது நாளை இல்லை
நேற்று என்பதும் இன்றில்லை
இதையறியாத இதயங்கள் பலதும்
ஏமாற்றம் கண்டு ஏங்கித் விக்கித்தவிக்கிறது

முகநூல் என்பது
முகவரியற்றது
வருவதும் போவதுமாய்
நிலைப்பதில்லையே

அன்பென்று வசைபாடி
ஆட்கொள்ளும் இதயங்கள் கோடி
அடைக்கலம் கொடுத்து
அறுத்துப் போகிறது இதயத்தையே

அறியாத,உலகம் புரியாத
பலரும்
நிலையிழந்து வாழும் இந்த நாட்களில்
நிறமிளந்த பூக்களாக
தன்னிலையிழந்து போகின்றனரே

ஆக்கம் ஜெசுதா யோ