நிறைவானவன். குரு..

இளைய நிலா
இசைக்குழுவின்
பிரம்மா இவன்.

ஐரோப்பாவில்
தோன்றிய இசைக் குழுக்களில்
முதன்மையானவன்.

தாளவாத்தியக்
கருவிகளை மீட்பதில்
வல்லவன்

கலைக் குடும்பம்
முத்தான சகோதரர்கள்
இசைக்கு சத்தானவர்கள்.

முத்தையாவின்
சொத்தாக மூன்று
ஆண் வாத்தியக்
கலை முத்துக்கள்..

விரல்களின்
வித்துவத்தால்
தபேலா ட்ரம்
பறை என முழங்கும்…

பணிவானவன்
துணிவானவன்
நகைச் சுவையாளன்
கவிதையிலும் இவன்
விரல்கள் நர்த்தனம்..

குரு பெயரோடு
மட்டுமன்றி பல
இசைக் கலைஞர்களுக்கும்
இசைக் குழுவுக்கம்
குருவானவன்…
வாழ்த்துவோம் வாரீர்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி