பாசமென்னும் போதையிலே

தூய உள்ளங்களை தேடிப்பிடித்து நல்ல
துணையாக்குவது,கடினமாகியது இன்று.
மாயம் செய்து பிறரை மடையராக்குவதே,
மனிதனின் நல்ல குணமாகியது இன்று.
காயப்பட்ட இதயமாகினும் அதை கீறி
கத்தி கொண்டு கிழித்து எறிந்துவிட்டு
பாயும் பணத்துக்கு பின்னால் சென்று
பக்கபலமாய் நிற்பதே ,பண்பு இன்று.
தாயும் ஆனால் என்ன ,பெற்றெடுத்த
தந்தைதானாகட்டுமே ,இத்தரணியிலே,
வாயும் வயிறும் வேறு வேறுதான்,என்ற,
வாக்கை எமக்கு தந்துவிட்டன்ரே அன்று.
மேயும் நல்ல மாட்டுக்கு கூட முதுகில்,
மெல்ல ஒரு சூடு வைத்தால் போதுமாம்,
போயும் போயும் மனிதனாய் பிறந்தும்,
போதை தெழியாமல் பிதற்றுவதேனோ?
காய நேசன்