பாழாய் போன வயல் நிலம்

 

உச்சி வேக காயும் வெயில்
பாழாய் போன வயல் நிலம்
மழையை நம்பி மனமுடைந்த நாங்கள்
மனசாலும் உதவ நினைக்காத நீங்கள்

எதற்காக உழைப்பு உருப்படாத வாழ்வு
வெறுப்பான கனவு வெறுப்பான உழவு
நீர் வளம் சுரண்டும் கூட்டம்
நிறைய பணத்தை சுருட்டவே நாட்டம்

உழவன் உள் மன வாட்டம்
நீக்க எவருக்கும் இல்லை நாட்டம்
ஊருக்கே உலை கொதிக்க நாங்கள்
உழைத்தவர் நாங்கள் என்பதை அறிவீர்கள்

வற்றிய குளங்களை போல நம்
வயிறும் காயுது ஐயா
சுடும் உச்சி சூரியன் போல
பசி நெருப்பாய் சுடுவதும் பொய்யா

உழவுத் தொழிலை எண்ணி
உயிர்கள் தொலைந்ததை எண்ணி
எம் நிலைக்கு இறங்க
இறைவனும் இன்று இல்லை!

பாழாய் போன நிலத்தை
பாவி தோண்டி பார்க்கின்றேன்
புதையல் என்றாவது ஒன்று
கிடைத்தால் என்ன என்ற எண்ணம்
இல்லையெனில் எந்தன் குடிசையில்
ஓர் உயிர் பசியால் மடிவது திண்ணம்!