புங்குடுதீவு “அம்பலவாணர் கலைஅரங்கு திறப்பு விழா

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைஅரங்கு திறப்பு விழாவை” முன்னிட்டு, உதைபந்தாட்டப் போட்டி.. (படங்கள்) -பகுதி-1

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு திறப்புவிழாவினை முன்னிட்டு “அம்பலவாணர் வெற்றிக்கிண்ணத்திற்கான” தீவக ரீதியிலான உதைபந்தாட்ட தொடர் இன்றுமுதல் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக புங்குடுதீவு நசரெத் கழக மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி தீவக ரீதியிலான உதைபந்தாட்டத் தொடரில், புங்குடுதீவு, காரைநகர், ஊர்காவற்றுறை, அல்லைப்பிட்டி, அனலைதீவு, நாரந்தனை, வேலணை, மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, போன்ற பல இடங்களில் இருந்தும் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றன.

போட்டி ஒழுங்கமைப்பாளர்களாக திரு.பிள்ளைநாயகம் சதீஷ், திரு.கருணாகரன் குணாளன் ஆகியோர் செயற்படுவதுடன், இன்றைய ஆரம்ப நிகழ்வை திரு.நல்லையா தர்மபாலன் தொடக்கி வைத்தார்.

முதலாவது போட்டியாக, புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகமும், நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகமும் மோதி ஒன்றுக்கு,ஒன்று என்று சமநிலையில் முடிவுற்றதைத் தொடர்ந்து, “பனால்டி கிக்” முறையில் (5 -3 ) நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி உள்ளது.

இரண்டாவது போட்டியாக, வேலணை அம்பிகைநகர் மகேஸ்வரி விளையாட்டுக் கழகமும், நயினாதீவு ஞானவைரவர் விளையாட்டுக் கழகமும் மோத இருந்த போதிலும், நயினாதீவு ஞானவைரவர் விளையாட்டுக் கழகம் கலந்து கொள்ளாமையினால், “வோக்கர்” முறை மூலம், வேலணை அம்பிகைநகர் மகேஸ்வரி விளையாட்டுக் கழகம், இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி உள்ளது.

மூன்றாவது போட்டியாக புங்குடுதீவு சன்ஸ்ரார் விளையாட்டுக் கழகமும், புங்குடுதீவு நிலாஜோதி விளையாட்டுக் கழகமும் மோத இருந்த போதிலும், புங்குடுதீவு நிலாஜோதி விளையாட்டுக் கழகம் கலந்து கொள்ளாமையினால், “வோக்கர்” முறை மூலம், புங்குடுதீவு சன்ஸ்ரார் விளையாட்டுக் கழகம், இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி உள்ளது.

நான்காவது போட்டியாக, புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக் கழகமும், காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகமும் மோத இருந்த போதிலும், காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகம் கலந்து கொள்ளாமையினால், “வோக்கர்” முறை மூலம், புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக் கழகம், இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி உள்ளது.

ஐந்தாவது போட்டியாக புங்குடுதீவு கத்தோலிக்கம் விளையாட்டுக் கழகமும், ஊர்காவற்றுறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக் கழகமும் மோதி, ஐந்துக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் ஊர்காவற்றுறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி உள்ளது.

தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. ஆரம்ப நிகழ்வான இன்று 9மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய முதலாவது போட்டி நண்பகல் 12மணிக்கு தொடங்கியது. ஆனாலும் கொழுத்தும் வெய்யிலயும் பொருட்படுத்தாது உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

பரிசு விபரம் – ஆடவர் – முதலிடம் வெற்றிக்கிண்ணம் + 25000 ரூபாய் / இரண்டாமிடம் – கிண்ணம் + 15000 ரூபாய் & மகளிர் – முதலிடம் வெற்றிக்கிண்ணம் + 10000 ரூபாய் / இரண்டாமிடம் கிண்ணம் + 5000 + போட்டித்தொடரின் சிறந்த வீர , வீராங்கனைக்கு உதைபந்தாட்ட காலணி வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Merken