புதியதோர் வரலாற்றைப் படைத்த ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழா!

பதினைந்து ஆண்டு காலத் தேடலும் இரண்டு ஆண்டு காலக் கடின பயிற்சியும் கொண்டு  ஈழத்தின் தமிழிசை – நூறு பாடல் அரங்கேற்றமானது யாழ்ப்பாணத்தின் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் தாயகத் தமிழிசை வேந்தர் விரிவுரையாளர் தவநாதன் தவமைந்தன் றொபேட்  அவர்களின் கடின உழைப்பில் 21.04.2019 அன்று நடந்து முடிந்துள்ளது.

ஈழத்தின் வரலாற்றில் ஆறு அடி உயரமான தமிழ்த்தாயின் சிலையானது முதல் முதலாக குரலோசை – நுண்கலைகளின் தாயகத்தால் அமைக்கப்பட்டு கலைத்தூது நீ.மரியசேவியர் அடிகளாரால் திரை நீக்கம் செய்யப்பட்டு அகத்தியர் அடிகளாரால் தீப வழிபாடு நிகழ்த்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டதுடன் 36 கலைஞர்களும் தமிழன்னைக்கு விளக்கேற்றி வணங்கி ஆரம்பமான நிகழ்வில் 
தவநாதன் தவமைந்தன் றொபேட்  மற்றும் அவரின் மாணவர்களான
ஸ்ரீ.மதுராங்கி
அ.அமிர்தசிந்துஜன்
க.ரஜீவன்
மு.துஸ்யந்தன்
சி.மதுஜா
ந.சங்கீதவாணி
மு.அனுச்சித்திரா
ப.சாரங்கன்
க.சுடரோன்
ஆகியோர் குரலிசையாளர்களாகவும்

அ.ஜெயராமன்
சு.கோபிதாஸ்
கா.குகபரன்
மா.பிரவீனா
ப.சியாம்கிருஸ்ணா
கே.வேலதீபன்
ஆகியோர் வயலின் இசையாளர்களாகவும்

மா.சிதம்பரநாதன்
அ.செல்வரத்தினம்
சதா.வேல்மாறன்
க.கஜன்
வ.ரமணா
க.நந்தகுமார்
சி.செந்தூரன்
நா.சிவசுந்தரசர்மா
நா.மாதவன்
கு.ரவிசங்கர்
ந.சதீஸ்குமார்
வெ.பிரபாகரசர்மா
ம.லோகேந்திரன்
கே.பிரணவன்
ச.பிரணவன்
து.சுபேஸ்
வி.ராகவன்
பா.ஞானவேல்
அ.சண்முகப்பிரியன்
ஞா.வசந்
ஆகியோர் தாள இசைக் கலைஞர்களாகவும் நிகழ்வை அணி செய்தனர்.

இவற்றுள் 07 பாடல்கள் ஏற்கனவே வேறு இசையாளர்களால் இசைவடிவம் பெற்றவைகளாக இருந்தன.

ஏனைய 93 பாடல்கள் தவநாதன் தவமைந்தன் றொபேட் அவர்களினால்  இசையூட்டப்பட்டு 120இற்கும் அதிகமான வகுப்புக்களில் கற்பிக்கப்பட்டன.

34 கவிராயர்களின் நூறு பாடல்கள் ஆற்றுகை செய்யப்பட்ட இந்த அரங்கேற்ற நிகழ்வில் 26 கருவிக் கலைஞர்களும் 10 குரலிசையாளர்களும் ஓரணியில் திரண்டிருந்தனர்.

ஈழத்தமிழர்களின் தேசியக் கலை அடையாளமான தமிழிசைக்கான இந்த அரங்கேற்றமானது 10 மணித்தியாலங்கள் கொண்டதாக 21 விதமான இசை அரங்குகளாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
காலை 9.00 மணிக்குத் தெடங்கிய அரங்கேற்ற நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு மாலை 5.30 மணியளவில் அனைத்துக் கலைஞர்களும் அரங்கில் ஒன்றாக அமர்ந்து நூறாவது பாட்டினை இசைத்து 8.30 மணித்தியாலங்கள் தொடர்ந்து தமிழிசை விருந்தளித்து மங்களம் பாடி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

ஈழத்தின் கலைத்துறை வரலாற்றில் இந்நிகழ்வானது புதியதோர் வரலாற்றை எழுதும் நிகழ்வாக அமைந்தது எனப் பல கல்வியாளர்களும் கலைஞர்களும் கூறிக்கொண்டனர்.
ஈழத்தின் தமிழிசை என்பது எங்கள் உயிரோடு கலந்த உணர்வில் பிசைந்த எழுத்தில் எடுத்தியம்ப முடியாத கண்ணுக்குப் புலப்படாத “ஒன்று”
எத்தனை தடைகள் வந்தாலும் ஈழத்தின் தமிழிசை உலகின் கடைசி எல்லை வரை ஓங்கி உரத்து ஒலிக்கும்.இது நிச்சயம் பலிக்கும்  என நிகழ்வினை சிறப்புற நடத்திமுடித்துள்ள தாயகத் தமிழிசை வேந்தர் விரிவுரையாளர் தவநாதன் தவமைந்தன் றொபேட் குறிப்பிட்டுள்ளார்.