புதை குழி !கவிதை சுதாகரன் சுதர்சன்

மயானத்தில் படுத்துக்கொண்டு
புதை குழி தேடுகிறேன்
ஆனாலும் தேவையில்லை

மரணத்தின் பின் விரும்புகிறேன்
தென்னோலையில்
படுக்கை கட்டி
ஒரு துளி கண்ணீர் இன்றி
அழு குரல் கேட்காமல்
ஒரு வெட்ட வெளியில்
புதைத்து விடுவதை

உயிருடன் இருக்கும் கொடுக்காத
சுகத்தயா
மரணத்தின் பின்
கொடுக்க போகிறார்கள்
மரத்தில் பெட்டி செய்து
கல்லறை எனும்
பேயுறங்கும் வீடமைத்து
மரணித்தும் உக்கா
நிலையில் உடலை
மூடி வைத்து
மீண்டும் கொடுமையை
தானே கொடுக்க போகிறார்கள்

காடுகளில் உணவின்றி
அலையும் மிருகங்கள்
சந்தோசப்படட்டும்
ஒரு வேளை உணவு
தேடாமல் கிடைத்து
விட்டது என்று
அங்காவது என்னால்
ஒரு புண்ணியம் கிடைக்கும்

                                                                                                                         ஆக்கம் சுதாகரன் சுதர்சன்

Merken