பெண்பாவாய்!கவிதை கவிஞர் ரதிமோகன்

கடிமணம் புரிந்தெனை தமிழ்மணம் கமழ
களிறு நடைபயின்றுபாரியாய்கரம்தந்த
மலரிடைகொய்தெனைசாய்த்து
மலர்சூடி கார்மேகமிழைத்த கூந்தலுக்கு

மனங்கொண்டகாதலை கந்தருவர்
கானமிசைக்க செவ்வரி கண்கள்நோக்கி
செய்யாள் நீ என செய்யுள் படித்து
வாய்மலர்ந்தருளிய களமேகம் நீ

பெண்பாவாய் நீ அன்பாவாய் எந்நாளும்
பண்பாடிய அலைகள் தொட்ட மண்ணில்
வரப்புதாண்டிய வெள்ளமாய் களிகூர்ந்து
வான்பரப்பாய் எல்லையற்றகாதலிசைத்த மன்னவன் நீ.  ஆக்கம் ரதிமோகன்