பேராபத்து.

அழிவின்
விழிம்பில்
உலகம்.
தனித்திரு
விழித்திரு என
அறிவிப்புக்கள்.
சமூக
இடை வெளி
அவசியமானது.
கையுறைகள்
முக கவசங்கள்
அணிதல் காலத்தின்
கட்டாயம்.
பாவித்த
பொருட்களை
வீசாதீர்..
இது பலவித
ஆபத்துக்களை
உருவாக்கும்.
எங்கும்
எதிலும் நுழையும்
கொரோனா..
அதனை
அழிப்பதில்
தோற்றுப் போனது
மருத்துவம்.
பறவை
முக கவசத்துடன்
நகைச்சுவையான
காட்சியிது.
கண்மூடி
வீசிய கண்
கெட்ட மனிதன்
காரியம் இது.
கவனம்
கொள்வீர்
உயிர்களை
காத்தல் நம்
ஒவ்வோர் கடன்.

ஆக்கம் கவியர் ரி.தயாநிதி