பொப்பிசை – மெல்லிசைமெல்லிசை நினைவுகள் திரு.எம்.பி.கோணேஸ் அவர்களின் சாதனை பற்றி பொ- பி நித்தி கனகரத்தினம்

நாளடைவில் எனது வாழ்க்கையில் பொப்பிசை – மெல்லிசை நினைவுகள் திரு.எம்.பி.கோணேஸ் அவர்களின் ஈழத்துச் சாதனை பற்றி பொப்பிசை பிதா நித்தி கனகரத்தினம்

1965 கொழும்பில் அக்குவைனாஸ் கல்லூரியில் ஆங்கில பாடல்களுடன் மேடையேற்றம். சுயனழை ஊநலடழ ஆங்கில சேவையில் பாடல் கேட்ட கொழும்பு மக்களுக்காகவூம் வெள்ளையர் போன்று நுபெடiளா Pழி ளுவயச போன்று வரவேண்டும் என்ற நப்பாசை. வேம்படியூம்இ யாழ். மத்திய கல்லூரி ஆங்கில இசை விரும்பிய ஆசிரியர்களின் வழி நடத்தலில் வந்த மோகம்.1966இல் யாழ்ப்பாணம் போனபின் இலக்குமணன் ஞானப்பிரகாசம் (பரவையச) சூரியபாலன் துரைச்சாமி Pயைஅழ யூளளழசனயைn (கனடாவில் அண்மையில் காலம் சென்ற மருத்துவர்) ஆகியோருடன் ஆங்கில இசைக்குழுவொன்றை ஆரம்பித்தோம். நான் னுசரஅ வாசித்துக் கொண்டு பாடினேன். ஆங்கலபாணியில் உடை வேறு.

யாழ் மாநகர சபை நடாத்தும் பௌர்ணமி கலை விழாவில் திறந்த வெளியரங்கில் மூன்று ஆங்கிலப்பாடல்களுடன் எனது இசையரங்கேற்றம். ஆங்கிலத்தில் பாடுவது மவூசு என்ற எண்ணமும் கல்லூரிப் பெண்கள் எம்மை கொண்டாட வேண்டும் என்பதும் முதலிடம் வகித்ததையூம் நான் மறுக்கமாட்டேன். வயது அப்படி.

1967ல் திரும்பவூம் யாழ் திறந்த வெளியரங்கு. இம்முறை மேலதிகமாக ஷஷவனபம்பரு|| என்று புகழ்பெற்ற ஊ.வூ.குநசயெனெழ என்பவரின் சிங்களப்பாடல். யூஅpயசயi Hயசனல ஐளெவவைரவந ழக வூநஉhழெடழபல பிரவேசம். ஷஷசின்ன மாமியே|| என்ற பாடலின் பிரசவத்திற்கும் தமிழ் பொப்பிசையின் அட்டகாசமான ஆட்டத்திற்கும் அடிக்கல் நாட்டியது. கார்த்திகையில் அங்கே அரங்கேற்றம். பலர் அதனை வரவேற்கவில்லை. சிலரது மொழியில் அது கஞ்சல் பாட்டு என்ற மதிப்பு.

சபைக்கு ஒவ்வாததா என்று அறிய 1968 பங்குனி மாதத்தில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் மாணவர்களிற்கிடையே அடுத்த வெளியீடு. ஆகா ஓகோ என்று இளைஞர்களின் குதியாட்டத்துடன் பாடல் பலரையூம் நனைத்தது. ஆங்கிலபாணியில் தமிழிசையென்றது வீரகேசரி. தினகரன் தனது 10ம் ஆண்டுக் கொண்டாட்டத்திற்கு அன்றைய பொலீஸ் அத்தியட்சகர் திரு. சுந்தரலிங்கத்திற்கூடாக நான் கட்டாயம் பாட வேண்டும் என்ற அழைப்பு. (நான் பாடவேண்டும் என்று தினகரன் பொறுப்பாளர் திரு. பிரகாசத்திடம் இரைஞ்சிய போது என்னை இருளிற்குள் தள்ளியவர்) தினகரன் விழா ஒன்றரை இலட்சம் மக்களைக் கவர்ந்தது. ஷஷபுதிய இசை வடிவம் புதிய பாடகன்|| என புகழ்மாலைகள் ஷஷதினகரன் விழா புகழ் நித்தி|| என்று பட்டம் வேறு. கால ஓட்டத்தில் எனது இசை வடிவம் எனக்குத் தந்த நிலையான பெயர் ஷஷசின்னமாமி நித்தி||. றீகல் சவூன்டஸ் அன்ட் லோகேஸ் ஆர்ட்ஸ் என்ற ஒலி அமைப்பாளர்கள் செய்த கைங்கரியம் யாழ்ப்பாண பட்டி தொட்டியெல்லாம் எனது பாடல்கள்.

ஓர் உண்மையை யதார்த்தத்தை இங்கே சொல்லியாக வேண்டும். உயர்சாதியென தம்மை இனங்காட்டி கொண்டவர்கள் எல்லோரும் இசையூம் நடனமும் எழுத்தும் தலித் மக்களுக்கே என நினைத்தது பலருக்கும் தெரியூம். என்றாலும் சிலர் இத்தடைகளைக் கடந்து ஆக்கங்களை மக்களுக்கு அளித்ததும் வெள்ளிடைமலை. என்னை திட்டியவர்களும் உண்டு. கற்றவர்கள் பலரும் எனது பாடல்கள் முக்கியமாக முஸ்லீம் இனத்தவர் பலரும் சீர் திருத்தக் கலைஞன் என கொண்டாடினார்கள். என் இசையூம் வளர்ந்தது.

1976ல் முதன் முறையாக கொழும்பில் எனது நிகழ்ச்சி. நான் நினைத்தபடி தமிழ் பொப்|| என்ற பெயருடன் வெள்ளவத்தை சரஸ்வதி மண்டபத்தில் (சண) தினபதி பத்திரிகை ஆதரவில் அரங்கேறியது. வூயஅடை Pழி என்றே இன்றுவரை உலக வலம் (இன்று இந்தியத்தமிழர் அதை சிதைத்து பாப் என்று தமிங்கலத்தில் எமக்கு விளக்குகின்றனர்) தமிழ்திரைப்பட இசைக்கு வேறுபட்டதாகவூம் ஊயடலிளழ என்ற தாளக்கட்டிற்கு அமைந்ததே தமிழ் பொப்பிசை. கலிப்சோ (ஊயடலிளழ) என்ற ஆங்கில பதத்திற்கு விளக்கம் தேடினால் தோற்றம் தெரியாதது. (ழுசபைin ரமெழெறn) என ஆங்கில ஆக்ஸ்போர்ட் அகராதி (நுபெடiளா ழுஒகழசன னுiஉவழையெசல) தமிழ் இலக்கியமோ கலிப்பா என்று சங்ககாலத்தில் பாடல்கள் இருந்ததென்று அதனை மருதநிலத்தினர் ஓர் வகையான குதியாட்டத்துடன் பாடினர் என்று பகர்கின்றது. ஸ்பானிய மொழியில் கூறப்படும் பைலா (டீயடைய in ளுiபொயடநளந வழழ) எனும் இசை நடனம் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த (எருமையூம் தற்போது மைசூர்) குறவர்கள் (புலிளளை – சுழஅயnளை) கொண்டு சென்றதாக ஆய்வூகள் தெரிவிக்கின்றன. ஆகவே நமது தமிழ்பொப் எமது சொத்தே என்பதில் எவர்க்கும் ஐயம் வேண்டாம். நான் சங்க கால இசையை திரும்பக் கொணர்ந்திருக்கின்றேன் என சந்தோசமடைய இதனை அறியாத சிலர் நான் பைலாவை கொப்பி பண்ணுகின்றேன் என இன்டர்நெட்டில் தர்க்கம்.

1972 புரட்டாதி 8ம் திகதி எனது முதலாவது தமிழ் பொப் இசைத்தட்டு வெளியீடு. எனது காலம் சில பிரச்சனைகளினால் வருட ஆரம்பத்தில் வெளியிடுகை முடக்கம். பரமேஸ் கோணே~pன் ஷஷஉனக்குத் தெரியூh?|| என்னை முந்தியது. ஈழத்தின் முதல் மெல்லிசைத்தட்;டு என்ற சரித்திரத்தை படைத்தது. என்றாலும் தமிழ் பொப்பிசையூலகில் என்னுடையது முதலாவது பொப்பிசைத்தட்டு என்று பெருமையூடன் வாழ்கின்றேன். இந்த இசை வடிவத்தை தமிழ் சினிமா பின்பற்றி எமது விளக்கங்களை தவிர்த்து அதற்கு கானா பாட்டு என்ற பெயர் வைத்து அதுவூம் போதாது என துள்ளுப்பாட்டு என்று பிதற்றி இறுதியில் குத்துப்பாட்டு என அழைக்கின்றனர். எமது பாடல்களை நாம் ஏற்கமாட்டோம். இலங்கையில் தமது இசைத்தட்டுக்களின் விற்பனையில் வீழ்ச்சி என என் முன்னே புலம்பி உங்கள் பாடல்களை தமிழ் நாட்டில் ஏற்கமாட்டோம் என வீறாப்பு பேசி ஈற்றில் எனது மூன்று பாடல்களை என் அனுமதியின்றி ஷபந்தயம்| எனும் படம் ஈறாக பல படங்களிலும் புகுத்திய பின்னரும் குத்துப்பாட்டு என பிரலாபம்.

மலேசிய நாட்டில் எனது பாடல்கள் ஒலி ஒளி பரப்பு சட்டங்களை மாற்றியூம் அமைத்தது. இந்தப் பாடல்களை எப்படி அமைத்தீங்க|| என்று நாதஸ்வரா என்ற இசை நிகழ்ச்சியின் நேர்காணலின் போது கேள்வி வேறு. நிச்சயமாக கோணேஸ் பரமேசினது பாடல்களும் இதற்கு ஓர் காரணமாகும்.

இதனை சொல்லாவிட்டால் தமிழ் பொப்பிசையின் ஆரம்பம் மட்டுமல்ல யாருக்கும் ஈழத்து மெல்லிசை மன்னர்களின் இசைப் பயண சாகசங்களும் மற்றும் கவிஞர்கள் பிரபல பாடகர்களது பங்களிப்புகளும் எமக்கென்று சினிமா சார்பற்ற ஈழத்தின் தனி நிகர் இசையினை எம் சந்ததிக்கு முதுசம் கொடுத்திருக்கின்றௌம் எனத் தெரியாது போய்விடும்.

68, 69 என்று யாழ் தீபகற்பத்திற்குள் என் இசை வலம் வரும் வேளையில் முதலாவதாக தொடர்ந்து பட்டி தொட்டியெல்லாம் பாடி சின்னமாமி பாடலை பிரபல்யப்படுத்தியவர் என்ற பெருமை ஸ்டனி சிவானந்தனையே சேரும்.

இதேவேளை திருகோணமலையில் இரு சகோதரர்கள் ஈழத்து மெல்லிசை மரபில் தாமே எழுதி இசையமைத்து பாடுகின்றார்கள் என செய்திகள் பல. யாரென்று தெரியாத நிலை. எனது மச்சாள் ஓர் நாள் தனது மாமனாரின் ஷபெடியன்கள்| ஏதோ செய்கின்றார்கள் என்று சொன்னது ஞாபகம். நானும் அதனை அறியவூம் முற்படவில்லை. ஒரு நாள் எனது மாமன் வீட்டில் தங்கி இருந்த வேளை தன்னை எம்.பி.பரமேஸ் என்றும் எனது மச்சாளினது ஒன்றுவிட்ட சகோதரன் என்றும் தானும் சகோதரன் எம்.பி.கோணேசும் மெல்லிசை செய்கின்றௌம் என்று சொன்னார். உங்களுடைய கள்ளுக்கடை பாடலில் வசனநடை எதுகை மோனையூம் திறம் என புகழாரம் வேறு. தமது பாடல் பற்றி ஒன்றும் கூறவில்லை. 72ம் ஆண்டில் அவர்களது பாடல் ஷஷஉனக்குத் தெரியூமா?|| எம்பி ஈழத்து மெல்லிசையை விண்ணுயர செலுத்தியபோது தான் எம்.பி.பரமேஸ் எம்.பி.கோணேஸ் எனும் இரட்டையரின் முன்னால் தோன்றும் எமது மாமனார் எம்.பீதாம்பரம் – ஆP என்ற பெயரின் சுருக்கத்திற்கு அர்த்தத்தை கொடுத்திருக்கின்றார்கள் என வியந்தேன். அந்த ஆP என்பதை மக்கள் பாடகர் என்று விளக்கியது அவர்களது பல பின்னைய ஆக்கங்கள் ஷஷஈழத்து மெல்லிசை மன்னர்கள்|| என்ற பெயரை சுட்டிக்கொடுத்தது. இவர்களது முக்கியமாக காதலர்களுடைய உள்ளங்களை கவர்ந்த பாடல்களே என்பேன்.

75களில் சென்னையில் உள்ள வாணிமகாலில் யூ.நு.ஆயழொயசயn பாடிய போது மக்கள் விண்ணப்பத்தில் கேட்டது சின்னமாமியே. அமுதன் அண்ணாமலையின் ழுh ளுhநநடய. பரமேஸ் கோணேஸின் உனக்குத் தெரியூமா. நேரில் அனுபவித்த என் தம்பி சொன்னது இது.

77ல் தான் மலேசிய அரசரின் பிறந்த நாள் நிகழ்வில் பாடச் சென்ற போது பல மேடைகளிலும் மக்கள் கேட்டது நீலச்சேலை கட்டி வந்தாள் எந்தன் காதலி|| என்ற இவர்களது பாடல். அவ்வேளையில் அவர்களை கலைஞர்களாகவூம் எனது உவினர்களாகவூம் பார்த்து புளகாங்கிதமடைந்தேன். எனக்குப் பாடல் வரிகள் தெரியாததால் என்னால் அவர்களுக்காக பாட முடியவில்லை. அதே ஆண்டு சகோதரர்கள் பிரிந்து விட்டார்கள் என அறிந்தபோது மனப்புழுக்கமடைந்தேன்.

எமது இசைக்கு மெருகு சேர்த்தது மேலை வாத்தியக்கருவிகளின் சங்கமமே. சின்ன மாமியே பாடலுக்கு வூhசநந பரவையசள உழஅடிiயெவழைn யனெ மநல டிழயசன pடரள வசரஅpநவ பயஎந வாந ளழரனெ ழக உயசniஎயட அரளiஉ. Pயிநச ஆளைமin pடயலநன வசரஅpநவ கழச டிழவா அந யனெ Pயசயஅநளா முழநௌh நஉழசனiபௌ.

உண்மையோ தெரியாது 72 களில் எனது மானசீக நண்பன் டீ.H.யூடினரட Hயஅநநன பெரியளவில் தன்னை எமது இசைக்கு அர்ப்பணித்து எமது பயணத்தில் சேர்ந்து கொண்டார். பல நாடுகளிலும் இன்றும் எம்மிசை ஓங்க அயாராதுழைப்பவர். அவருடன் பலரும் இணைந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் பொப்பிசைக்கு இடம் கொடுத்தார். அந்நிகழ்ச்சியில் பரமேஸ் கோணேசின் பாடல்களை ஒலிபரப்பியபோது எமது இசை பைலா அல்ல என எதிர்த்ததால் அவர்களுடைய பாடல் யாவூம் தவிர்க்கப்பட்டன என அறிந்தேன். சில காலத்தின் பின்னர் அவர்களே ஷஷதமிழ் பைலா பாட்டுப்பாட|| என பாடினார்கள். ஏன் இந்தச் சிக்கெடுப்பு என நான் புழங்கியதும் உண்மை.

1992ல் ரொறன்ரோவில் கோணேஸின் இசையில் நான் முதன்முறை பாடினேன். என் அனுபவத்தில் பல நாடுகளிலும் கச்சேரிகளுக்கு ஆவலுடன் அழைப்பு விடுப்பவர்கள் மக்கள். பணம் தருவோம் வாங்க என்பது சகஜம். போய் அவதிப்பட்டு எமாற்றத்துடன் அவூஸ்திரேலியா வருவது நான் அனுபவித்த உண்மை. பலர் ஏமாற்றியிருந்தாலும் சொன்னதை செய்பவர்களில் கோணேசும் ஒருவர் என்பது பெருமைக்குரியது.