மதுசுதாவின்”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இலண்டன் மாநகரில் இடம்பெற்று வரும் விம்பம் விருது விழாவில் இம்முறை நான் இயக்கியிருந்த எமது ”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு படைப்பின் உழைப்பு என்பது தனி ஒருவனது மட்டுமல்ல ஆனால் அதற்கான உழைப்பின் ஆழங்கள் என்பது அப்படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரங்களிலேயே வலிமறக்கவைக்கும்.

ஆனால் இப்படைப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விகளும் தான் இப்படைப்பின் கதைவடிவத்துக்கும் மறைமுகமாக நான் சொல்ல விரும்பிய அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியிலும் எனது இயக்கத்தில் அமைந்த பந்து குறும்படம் சிறந்த குறும்படமாகத் தெரிவாகியிருந்தது.

இப்படைப்புக்காக என்னோடு உழைத்த 
முதலிட்ட ஐங்கரன் கதிர்காமநாதன்
வாழ்ந்த – முல்லை ஜேசுதாசன், கமலராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜா, தர்சன் 
காட்சிக் கவ்வல் – ரிசி
கத்தரித்தொட்டல் – சன்சிகன்
ஒளிச் செப்பனிடல் – சன்சிகன்
இசைச் செருகல் – பத்மயன்
ஒலிக்கவ்வல் – பத்மயன்
இயக்க உதவி – குருநீலன் , தர்சன்

அனைவருக்கும் நன்றிகள்.

போட்டி ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற சக படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.