மாமர நிழலில் கவிதை ஈழத் தென்றல்

ஓங்கி நின்ற மாமர நிழலில்
ஒட்டிக் கொண்டு நீ இருக்க
காது மடல்களிலே
மூச்சுக் காற்று வெப்பம் சேர்க்க

இடுப்பை வளைத்த கைகளிலே
இதமாக நான் சரிய
இன்பமான கவிதைகளை
இசையோடு நீ உரைக்க

கருகலான இருளோடு
நிழலாக நின்றோமே
கட்டிக் கொண்டு கதை கதையாய்
நாள் முழுதும் அளந்தோமே

வான்வெளியில் ஒளித் துளையாய்
ஆங்காங்கே மின்மினிகள்
விரித்து வைத்த சேலையென
வான் வெளியில் கரும் முகில்கள்

முகில் எனக்கு பிடிச்சிருக்கு
கரும் இருளும் பிடிச்சிருக்கு
உன்னையும், பிடிச்சிருக்கு
உன் கரு நிறமும் பிடிச்சிருக்கு

கழுத்திலே கட்டிக் கொண்ட
கருமணியும் புடிச்சிருக்கு
உந்தன் கருப்பு நிறத்தினிலே
எனக்கு பைத்தியமே பிடிச்சுருக்கு

கருப்பில் கொஞ்சம் தூக்கலான
கனவுக் கன்னி உன்னையே
நித்தமும் கனவு காணும்
என்னை உனக்கு பிடிக்கல்லையா?

ஆக்கம்  ஈழத் தென்றல்