‚முகநூல் முற்றத்து வெளியில்‘ புலம்பெயர் இளைய படைப்பாளி கார்த்திகா பெருந்தொகுப்பு!

ஈழத்தின் தமிழ் பேசுவோரின் பன்முகப் படைப்புகளின் பெருந்தொகுப்பான ‚முகநூல் முற்றத்து வெளியில்‘ புலம்பெயர் இளைய படைப்பாளி சுவிட்சர்லாந்து றதன் கார்த்திகா அவர்களும் இணைகின்றார்.

முகநூலில் உலாவந்த பன்முக படைப்புகளின் தொகுப்பாக வெளிவரவுள்ள ‚முகநூல் முற்றத்து வெளியில்‘ பெருந்தொகுப்பு.

முகநூல் என்பது நம் முன்னோர்கள் கற்பனை செய்திராத ஒன்று. நமது காலத்தில் அது கிட்டியது நன்று. முகநூல் என்னும் பெருந்தளத்தில் கணக்கிலடங்கா நற்படைப்புகள் பதிவாகி இருக்கின்றன. இன்னும் பதிவேறி வருகின்றன. இவை பல்வித அம்சங்களாய் பரவியிருக்கின்றன.

இவ்விதமான படைப்புகள் முகநூலோடு முடிந்திடாமல் அச்சாகி ஆவணமாகி நிலைக்கவே ‚முகநூல் முற்றத்து வெளியில்‘ எனும் பெருந்தொகுப்பினைக் கொண்டுவர எண்ணினோம். ஏற்கத்தகு எவ்வகை படைப்பாயினும் இந்நூலில் இடம்பெறும். இலங்கையைச் சேர்ந்த(புலம்பெயர்ந்தோர் உட்பட) எப்பகுதியில் வாழும் தமிழ் பேசும் உறவுகளும் இந்நூலின் படைப்புகளுக்காக உள்வாங்கப்படுவர். கீழ்வரும் விதிமுறைகளுக்கமைய படைப்புகள் உள்வாங்கப்படும். இப்பெருந்தொடுப்பின் வெளியீட்டு விழாவானது முகநூலின் நல்லகங்களின் பங்கேற்போடு தனித்துவமான முறையில் ஒழுங்கு செய்யப்படும்.

01. இந்நூலில் பங்கேற்க விரும்புபவர் முகநூற் கணக்குடையவராக இருத்தல் அவசியமானது. முகநூற் பாவனையாளர் அல்லாதோரின் படைப்பு உள்வாங்கப்படாது. இலங்கையைச் சேர்ந்த(புலம்பெயர்ந்தோர் உட்பட) எப்பகுதியில் வாழும் தமிழ் பேசும் முகநூற் பாவனையாளர்களும் இந்நூலில் பங்கேற்கலாம்.

02. பொதுவான சிறு கட்டுரைகள், குறுங்கதைகள், துணுக்குகள், கவிதைகள், தனிப்பட்டவை அல்லாத தகுதிமிகு புகைப்படங்கள், செய்திப் பகிர்வுகள், ஆய்வுசார் பத்திகள், அரசியற் சார்ந்த எழுத்துகள், கலை இலக்கிய சமூகம் சார்ந்த நிகழ்வுப் பதிவுகள், நூல் விமர்சனங்கள்/பகிர்கைகள், மருத்துவ/விஞ்ஞான சுயவாக்கப் பகிர்வுகள், தத்துவார்த்த பதிவுகள், ஓவியங்கள், சிறுகதைகள், அறநெறி நற்பகிர்வுகள், ஏற்கத்தகு போர்க்கால பதிவுகள் உட்பட இன்னும் பிற நூலுக்குத் தகுதியானவற்றை அனுப்பலாம்.

03. எழுத்து வடிவ பதிவுகள் ஏ4 அளவுதாளில் ஒரு பக்கத்திற்குள் அடங்குதல் சிறப்பானது. அதிகமெனில் பரிசீலித்து ஏற்கப்படலாம். பங்கேற்பாளரின் ஒரு படைப்பு மட்டுமே உள்வாங்கப்படும். சமூகத்திற்கு ஏற்பற்றதும், தனிப்பட்டதுமான புகைப்படங்கள் ஏற்கப்படாது.

04. நூலில் இடம்பெறும் ஒருவரின் முகநூல் முகவரியுடனான சுயவிபரப்படம் பதிவேற்றப்படுவதோடு, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி என்பனவும் இடப்படும். தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி என்பவை கட்டாயமானதல்ல. முகவரியை முழுமையாக இட விரும்பாதோர் அதனைத் தவிர்க்க இயலும்.

05. ஒருவரின் முகநூலில் அவரல்லாத படம் சுயவிபரப் படமாக இருப்பினும் ஏற்கப்படும். நூலிற்கு படைப்பினை அனுப்புபவர் சுயவிபரப் படத்தினை முகநூற் பாவனைப் பெயரோடு திரைப்பிடிப்பு(ஸ்கிரீன் சொட்) செய்து அனுப்பலாம். அல்லது நூலாக்கக் குழுவினர் குறித்த பணியைச் செய்துகொள்வர்.

06. படைப்புகளை muganoolmutram2018@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது ‚முகநூல் முற்றத்து வெளியில்‘ என்னும் முகநூலின் பற்றியம்(மெசஞ்சர்) வழியாகவோ அனுப்பலாம்.

07. தகவல்கள் மற்றும் பிற விடயங்களுக்கான தொலைபேசி எண்கள். 0094 775892351, 0094 779009491, 0094 778067962, 0094 7750067960, 041 783221212

08. தகவல் வெளியிடப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்கள் வரை படைப்புகள் ஏற்கப்படும்.

09. முகநூற் பாவனையாளர் மற்றும் படைப்பு என்பன ஏற்ற வழிகளில் உறுதிசெய்யப்படும். ஏற்கனவே வெளியான பதிவெனில் திகதியை இடுவது சிறப்பானது. புதிய பதிவெனில் முகநூலில் பதிவேற்றி நூலில் இடம்பெறச் செய்தல் நன்று.

10. தொடர்பிற்கான மேலதிக முகநூல் முகவரிகள்
1. யோ புரட்சி
2. Vijay printing press
3. Arivirutchcham mullaimaha

11. குழுமத்தினரால் தேடல் செய்து அடையாளம் காணப்படும் படைப்புகள் உரியோர் அனுமதி பெறப்பட்டு நூலில் இணைக்கப்படும்.