முத்தம் ஒன்று …..❤️

பேசமுடியாத
வார்த்தை ஒன்று
ஆன்மாவிலிருந்து
புறப்பட்டு……………..
மகிழ்ச்சிக்காக
அன்புக்காக
காதலுக்காக
கருவியாக்கப் பட்டு
நாடி நரம்பு தசைகளின்
உணர்வுகள்
இதள்களில் குவிக்கப்பட்டு
அவரவர் அன்புக்கேற்ப
அளவுகோலாகி
சத்தமிட்டு
முத்தம் என முடிகிறது
முத்தத்தின் முடிவில்
மின்னியல் அதிர்வால்
இதள் விரித்து
புன்னகை பூக்கிறது மனசு
06/07/18
சுபாரஞ்சன்