முன்ஸ்ர் மாநகரில் சிறப்பாக நடந்தேறிய பொங்கல் விழா 19.01.2019

 


முன்ஸ்ர் தமிழர் கலை,கலாச்சார, விளையாட்டுக்கழகமும், கலைவாணி பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்திய மாபெரும் பொங்கல்விழா கலைமாலை..காலை 11மணியளவில்  கலைவாணி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கழககுழுமத்தினர், இணைந்து மிகவும் குதூகலமாக மகிழ்வுகொள்ள. தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்ஸ்ர் நகர வெளிநாட்டு அமைச்சின் தலைவர் Dr.omer Lutfu yavuz அவர்களும், சிறப்பு விருந்தினராக கி.த.கவிமாமணி மற்றும் கழக முன்னைநாள் தலைவர் திரு.த.பரமேஸ்வரன் ஆகியோர் மாணவர்களின் வரவேற்பு பூங்கொத்தை ஏற்று மங்கலவிளக்கினை ஏற்றி வைக்க விழா இனிதே ஆரம்பமானது…

தொடர்ந்து அகவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், கழக தலைவர் இமானுவேல் சுறேஸ் அவர்களின் வரவேற்புரையினை தொடர்ந்து இளம் மொட்டுக்களின் கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரிக்க பிரதம அதிதிகளாக வருகை தந்த Dr.omer Lutfu yavuz அவர்கள் தமிழில் வணக்கம் கூறி பொங்கலின் சிறப்பும், இலங்கையர்களின் உணவு பற்றியும் சிறப்பாக நகைச்சுவையாக தனது உரையை தொடர்ந்தார் தொடர்ந்து மிகவும் சிறிய 5-9. வரையான குழந்தைகளின் கிராமிய பாடலும் நேர்த்தியான தாளமும் மிக மிக சிறப்பே…. கலை நிகழ்வு என நிகழ்வு தொடர்ந்த வண்ணமே இருந்தது… அதைவிட 2019 பொங்கல்விழாவில் சற்று மாற்றத்தை கழகம் செய்தமை பாராட்டவேண்டிய நிகழ்வே.. குடும்பங்களுக்கான கோலப்போட்டி நிகழ்வும், தமிழர் பாரம்பரிய உணவுகள், பொருட்கள் கண்காட்சியும் சிறப்பான நிகழ்வுகளே … இளம் கலைப்பொக்கிஷங்களையும் உருவாக்கிய பாடசாலை,கழக சமூகத்திற்கு பாராட்டும், வாழ்த்தும் உரித்தாகுக….
பத்திரிகைசெய்திற்காக…
தர்மா….யேர்மனி