முல்லைத்தீவு சிலாவத்தையில்.“யோகம்மா கலைக்கூடம்“ திறந்து வைக்கப்பட்டது.

24.06.2020.அன்று மிகவும் பிரமாண்டமானமுறையில். முல்லைத்தீவு சிலாவத்தையில்.“யோகம்மா கலைக்கூடம்“ திறந்து வைக்கப்பட்டது. கலைஞர்முல்லை தரு. ரமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில். தேவாலய பங்கு தந்தை. திரு.நிக்சன் கொலின் அடிகளார் ஆசியுரை வழங்கினார். முல்லைத்தீவு மாவட்ட உதவிச் செயலாளர் திருமதி .கேசிதா லிசோ.பிரதான அதிதியாகப் பங்கேற்று திறந்து வைத்தார். ஒலிப்பதிவு கலைக்கூடத்தை.எனது ஆசான் ஈழத்தின் நாடக கலைஞரும்.இயக்குனருமானதிரு. புதுவை அன்பன் அவர்கள் திறந்து வைத்தார்..எனது இசை அமைப்பாளர்.திரு ப.கருணாகரன் முதலாவது ஒலிப்பதிவை பதிவு செய்தார்.தொடர்ந்து யோகம்மா கலைக்கூட இயக்குனர் கு.யோகேஸ்வரன் அவர்களது அறிமுக உரை இடம்பெற்றது. இதனைதொடர்ந்து யோகம்மா நினைவாக கலைஞர்களுக்கு வாழ்த்துப்பா வழங்கிவைக்கப்பட்டது.. இதற்கான முழு முயச்சியும். எமது சமூகத்தின் நல்வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் எனதுஅன்பு சகோதரர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். சமூக சேவையாளர்,அவைத்தென்றல் திரு .வல்லிபுரம் திலகேஸ்வரன்அண்ணாவின் அன்பு தாயாரும். எனது தாயாரும்.. ஒரே பேரில் தான் உள்ளனர்.எனவே இரண்டு தாயாரின் நினைவாகஉருவாகியது தான்“ யோகம்மா கலைக்கூடம்“ இந்த கலைக்கூடம் திரு.திலகேஸ்வரன் அண்ணாவின் முழு முயற்சியால் தான். உருவாகியது. அவருடைய அற்பணிப்பும் தியாகஉணர்வும் வார்த்தைகளில் வடித்து விடமுடியாது. இந்த காலத்தில் போலியாகவிளம்பரம் தேடுபவர் மத்தியில். உண்மையான உழைப்பு யார் கண்ணுக்குதெரிவது குறைவாக உள்ளது..என்னை பொறுத்த வரையில் அவர்சொன்னதை நிறைவேற்றி உள்ளார்இனி வரும் காலங்களில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு யோகம்மாகலைக்கூடம். எப்போதும் உறுதுணையாகஇருக்கும் அத்தோடு எமது கலைக்கூடம்திறப்பு விழாவிற்கு. எமது அழைப்புகளைஏற்று வருகை தந்த அத்தனை கலைஞர்களும் எமது அன்பு சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திரு . திலகேஸ்வரன் அண்ணாவுக்கும்.எனது இதயத்தின் நன்றிகள்