முல்லையில் வள்ளுவர் விழா

முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கல்லூரி அதிபர் பொ. பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
.
இதில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதா் சங்கர் பாலச்சந்திரனும் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராசாவும் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு நிகழ்வாக எமது குழுவினரின் பட்டிமண்டபம் நடைபெற்றது. 
.
வள்ளுவர் காட்டிய வழியை வையகம் இன்று கைக்கொள்கின்றது – கைக்கொள்ளவில்லை. என்ற பொருளில் இடம்பெற்ற இந்தப் பட்டிமண்டபத்தில் இ.சர்வேஸ்வரா, ந.ஐங்கரன், ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ, ஜீவா. சஜீவன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர். நடுவராக ச.லலீசன் பங்கேற்றார்.
.
நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி 1200 மாணவர்களையும் 74 ஆசிரியர்களையும் உள்ளடக்கிய தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரையான வகுப்புகளைக் கொண்ட தேசியப் பாடசாலை ஆகும்.