மோகமேனடி..


தாகம் தணியாதடி.
எவருக்கும்
பணியாதடி.கண்ட
இடத்திலும் குனியாதடி
துணிவான மொழி தமிழடி..

மூப்படையா
மலரிடம் வண்டினம்
குடைவது போல்
என்னிடம் ஏதோ
எதிர்பார்க்கின்றாய்..

பானையில்
இருந்தால் அகப்பையில்
வருமென்பர்
வேதனை தீ
மூட்டாதே..!

குன்றவில்லை
தமிழ் தார்ப்பரியம்
அன்று தொட்டு
இன்று வரை மங்கவில்லை.

காற்றடித்த
காலத்தில்
தூற்றியவர் நாமடி
வேற்று மொழிகளை
நம்பி வாழ்ந்தவரில்லையடி..

ஆங்கில முலாம்
பூசும் அவசியம்
அடியேனுக்கு அவசியமாக
தோன்றவில்லை
ஆனாலும் நெளிக்கவில்லை.

அமெரிக்கன்
தமிழ் அறியான்
26 எழுத்துக்குள்
அவன் ஆட்டம்
முடக்கமடி…

சத்தங்களுக்கே
சந்தங்கள் சேர்த்து
வாழும் மொழி. காகா
எனும் கரைதலுக்கு
காகம் எனும் நாம ம்
சூட்டிய அருமை மொழி.

வளையாத
செம்மொழி தமிழ்
குலையாத
குடும்ப மொழி தமிழ்
நிலையான
நீண்ட மொழி தமிழ்..
என் சொந்த மொழி
தமிழ் என்பதில்
என்றும் பெருமையடி..

ஆக்கம் கவிஞர் தயாநிதி