யாதும் ஊரே யாவரும் கேளீர்!கவிதை அ.பவளம் பகீர்

 

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று
உலகை நேசித்து நின்ற இனமே நாம் தமிழர்..

அடுத்தவன் மரணத்தினை கண்டு மகிழும்
ஈனப்பிறவிகளல்ல நாம் தமிழர்கள்…

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட
மக்களுக்காக இறைவனை வேண்டுகின்றோம்..

எங்கள் மரண ஓலங்களின்போது எவருமே
எங்களுக்காய் எதுவும் செய்யவில்லைத்தான்..

அதுகூட பரவாயில்லை ஆனால்
எங்களுக்காய் நாம் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி
ஓவென்று அழக்கூட விடவில்லையே..

இழவு வீடென வெளியிலே சொல்ல முடியாமல்
அறையை பூட்டி யாருக்கும் தெரியாமல்
உள்ளிருந்து அழுத காலங்களும் உண்டு.

மதவாச்சி முதல் மாத்தறை வரை
பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பொங்கி அன்று
எமை வென்றுவிட்டதாய் மகிழ்ந்தார்களே..

உயிரிழப்பின் வலி உணர்ந்தவர்கள் நாம்
இன்னொருவர் மரணத்தில் என்றைக்குமே மகிழ்ந்திடமாட்டோம்.

அ.பவளம் பகீர்.