யாழில் முதற்தடவையாக விண்வெளி சார்ந்த முழுநீள திரைப்படம் தயாராகி வருகின்றது

திரைப்படத் துறையானது இலங்கையில் வளர்ச்சி கண்டு வரும் காலக்கட்டத்தில் அதனுடைய அடுத்த கட்ட பரிணாமமாக மிகவும் தத்ருவமாக கணணி வரைகலை தொழில்நுடபத்தை பயன்படுத்தி ‘புஷ்பக 27’ என்ற முழுநீள விண்வெளி திரைப்படம் தயாராகி வருகின்றது.

2060ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் எவ்வாறு இருக்கும். இங்வொரு விண்வெளி ஆய்வுகூடம் அமைந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என கற்பனை கதையை உள்ளடக்கிய வகையில் ‘புஷ;பக 27’ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.

50 வீதம் வீ.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த முழுநீளத் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் ஒரு பரீட்சார்த்த விண்வெளி திரைப்படமாக அமைந்துள்ளது.

புஷ்பக 27 என்ற பெயரானது எமது வரலாற்றை மீட்டிப்பார்க்கும் வகையில் பண்டைய இலங்கையை ஆண்ட தமிழ் அரசனாக இராவணனுடைய புஷ்பக விமானத்தை நினைவுப்படுத்தும் முகமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

திரைப்படத்தின் இயக்குனர் சிவநேசனின் முதல் இந்த படைப்பானது இலங்கை திரைப்பட வரலாற்றில் தனிஇடத்த்தை பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை காரணம் வரலாற்றில் முதற்தடவையாக விண்வெளி சார்ந்த முதல் முழுநீளத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் கணணி வரைகலையைபட பயண்படுத்தி உறுவாக்கப்பட்ட இந்த திரைப்படம் பலரது எதிர்ப்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.