யேர்மனி சோஸ்ட் நகரில் 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, 2019விழா

யேர்மனி சோஸ்ட் நகரில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளோடும், தாயகத்தை நினைவூட்டும் அரும் கண்காட்சியோடும் மிகவும் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள்.பெருமளவில் யேர்மானிய மக்கள் காலையிலிருந்தே கண்காட்ச்சியைப் பார்வையிட்டுச்சென்றிருக்கிறார்கள்.சோஸ்ட் நகர மேயர் அம்மையார் கலைநிகழ்வுகளக்கண்டு பாராட்டினார்.சேலை அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.கம் காமாட்சியம்பாள் ஆலய குரு திருமிகு பாஸ்கரக்குருக்கள் மற்றும் வெற்றிமணி ஆசிரியர், திரு.திருமதி.நயினைவிஜயன்,திரு.கிருஷ்ணமூர்த்தி,மற்றும் யேர்மானிய விருந்தினர்கள் விளக்கேற்றிட, கடவுள் வாழ்த்தைத்தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.பரதம், இசை நடனங்கள், வீணை, கரகம் காவடி,மயில் நடனம் பட்டிமன்றம் தமிழர் அரங்கம் சபேசன் தலைமையில் இடம்பெற்றது.அனைத்து நிகழ்வுகளும் சபையோரை மகிழ்ச்சிப்படுத்தின.27 ஆண்டுகளாக திருமதி.தெய்வேந்திரம் அவர்களின் சேவை பாராட்டத்தக்கது.அதனால் தான் வாழ்நாள்சாதனையாளர் விருது தமிழருவி நிறுவனத்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.அவரும் அவரது கணவர் திரு.தெய்வேந்திரம் அவர்களும் இணைந்து ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியே ஆகவேண்டும்.இவர் உ.த.ப.இயக்கத்தோடும் இணைந்து நற்பணிகளை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.ஒற்றுமையும் விட்டுக்கொடுப்பும் எதிர்காலத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் என நம்புவோம்.ஒன்றுபட்டால்தான் உண்டுவாழ்வு.
படம் செய்தித்தொகுப்பு தமிழருவி செய்திப்பிரிவு நயினை விஜயன்.