வசந்தத்தில் ஓர் நாள் !கவிதை கவிக்குயில் சிவரமணி

 

இதயவானம் சிவந்தது
இறகு இரண்டு பறந்தது
வான உலாவந்தது
வசந்தராகம் இசைத்தது

அன்பு மழையில் நனைந்தது
அற்புதவிளக்காய் காதல் தெரிந்தது
அணைத்தபோது துடித்தது
அதுதான் முதல் வசந்தம் புரிந்தது.

மயிலோடு மயில் இறகு
குயிலோடு குழல் ஓசை
இதன் நடுவே இணைந்த கைகள்
இன்பத்தேர் வெள்ளோட்டமோ

தேன் உண்ட வண்டின்
தெவிட்டாத இன்பம்
கட்டுண்டு கிடந்த கன்னியவள் பெண்மை
காதலில் கரைந்தது வசந்தமாய் மணந்தது.

தாலியேறிய பின் தானே தாம்பத்தியம்
தரும் சுகம் ஆயிரம் வசந்தகாலம்
முதல் இரவு முதல் முத்தம் மறக்காது
முடிந்து போன வாழ்க்கையிலும் நினைக்கத்தோன்றும் வசந்தத்தில் ஒர் நாள்!!

 ஆக்கம் கவிக்குயில் சிவரமணி