வாழ்க்கை ஒரு போர்க்களம் !கவிதை- வேலணையூர் ரஜிந்தன்.

பரந்து கிடக்கும் தேசம்
விரிந்து நீள்கிறது சோகம்

துயரச் சுமைகளும்
முட்கம்பள விரிப்புக்களும்
வீச்சான பயணங்களை
தடுத்து நிறுத்தக் காத்துக் கிடக்கும் !

மேடு பள்ளம் தோண்டப்பட்டு
தட்டி வீழ்த்த தவம் கிடக்கும்
பசுத்தோல் போர்த்திய நரிகள் !

விச நாகங்களின் காத்திருப்புக்கள்
பதுங்கியிருப்புக்களில் நீளும் !

நேர் வழிப்பாதைகள் தோறும்
முட் புதர்கள் மூடிக் கிடக்கும்

தடைகள் உடைத்து நடை போட
தடையின்றி செறிந்து கிடக்கிறது
பொறிக் கிடங்குகள் பல..

உடைந்து வீழ்ந்த இறக்கைகள்
ஒட்டி எழுகிறது வீச்சோடு உள்ளம் !

வெற்றிச் சிகரங்களில் பிரகாசிக்கிறது
ஒற்றைச் சூரியனாய் அழகிய வாழ்க்கை !

துயரங்களைக் கடந்த
உயரங்களில் தான் தெரிகிறது
வாழ்க்கை ஒரு போர்க்களம் என்று !

ஆக்கம் – வேலணையூர் ரஜிந்தன்.