விழி.. கவிதைகலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

இல்லாத போது
இருந்தது.
உண்மையில்
இனித்தது….

இருக்கின்ற போது
இல்லாமல் போனது.
உண்மையில்
கசக்குது…….

நிலையாக எதுவுமே
இ்லாத போது
பொல்லாத போராட்டங்கள்
பொருளற்றதே……

இருப்பை வைத்து
விருப்பை கணக்கு
போடும் மானிடா
எல்லாமே எதுக்கடா…

சும்மாவா பாடினான்
பட்டினத்தான்
காதற்ற ஊசியும்
வாராது காணென்று….

மெய்யான பொருளை
விட்டு பொய்யான
கருக்கொண்டு கண்டபடி
அலையாதே…

உலகம் சுருங்கி
உண்மையும் சுருங்கி
அருவும் உருவும்
அடையாளமிளக்குதே..
விழிப்புடன் எழு..