வீண் ஆசை!கவிதை தே.பிரியன்

ஆச வைச்சான் மனசில
காசில்லாத வயசில
கண்ணு வச்சான் பைக்கில
வாங்கி விட்டான் லீசுல
காசு கட்ட முடியல
கடன் கார சிறுபிள்ளை
மாசம் மாசம் முழிக்கிறான்
அம்மா திட்டஒழியிறான்
ஆசை வையு தப்பிள்ள
உழைப்பிருக்கனும் மாப்பிள
அசிங்க பட முடியல
இந்த வயசு அதுக்கில்ல

வயசு பொண்ணு ரோட்டில
மினுக்கி போகும் அழகில
பாக்கதானே தோணல
வீணாய் போகுது காசெல்லோ
மச்சான் காரன் முறைப்பில்ல
கச்சான் விற்க தோணுதே
அதுக்கு மட்டும் கடனில்ல

ஆசபட்டது கிடைக்கல
மோசமான உலகில
வாழ்ந்த வாழ்வு விடுபட
ஏங்கி நிக்கிறான் தெருவில

ஏண்டா குடிக்கனும் நாம
வீணா சண்டைகள் தோண
ஏண்டா நிறுத்தனும் நாம நீ
கேட்பது காதில் விழுதே
உன்னை அழிப்பது நீ
ஆற அமர்ந்து யோசி
உந்தன் நிலமை உணர்ந்து
இனியும் உன்னை மாற்றி

ஆக்கம் தே.பிரியன்