வென்று தோற்ற ஆண் விதவை…


கனவுகளைக் காவலரணாக்கி
காதல் குண்டுகளை ஏவியவன்.
கடதாசி இல்லாத காதலை
காவியமாக்கித் தாவியவன்.
போராட்டம் தான் காதலும்
பொழிப்புரை அள்ளித் தூவியவன்.
வேரோட்டம் காதலில் மதிப்பு என்று
சோழ அம்பெடுத்து ஏவியவன்.
முத்த முத்திரை சேகரித்து
காதல் சாதனை கீறினான்.
மூச்சில் ராட்டிணச் சுழற்சியது
கவிஞனாகத் தேறினான்.
இதுவரை இல்லாக் கற்பனையால்
உயிரின் சிறகால் உயிர் கடந்தான்.
இமைகள் இரண்டும் ஒரு கோட்டில்
சுகமாய் அள்ளிச் சுகமடைந்தான்.
வெள்ளைத் தாளை மஞ்சளென
பார்வை கலங்கி வரமளித்தான்.
வெறுமை இல்லாப் பெரு வெளியில்
பறந்து பறந்து பரிசளித்தான்.
தாலி வரையும் தலை நிமிர்ந்து
பேச்சை நம்பி மூச்செடுத்தான்.
தாகம் ஓங்க மனம் வறண்டு
பாவம் அவன் தலை கொடுத்தான்.
இன்று இதயம் அருகில்லை
இது விதியென்று இரைகிறான்.
இன்பம் துன்பம் பணமில்லை
மாற்றம் கண்டு மறைகிறான்.
பாலை வார்த்து இறை மனதைக்
குளிரச் செய்து என்ன பயன்.
பார்வை உள்ள பொழுது வரை
இருளாய் ஆனது இராசி பலன்…
கலைப்பரிதி.