வேடிக்கை..


அன்றாட
வாழ்வில் நின்றாடும்
சில மாற்றங்களும்
பல ஏமாற்றங்களும்.

மனிதருள்
மட்டும் நவீனமய
மாறுதலின்
விந்தை விசித்திரமே..

மழை வரும் போது
குடையை தூக்கிப்
பிடிப்பதும் பின் ஓரத்தில்
போடுவதும் கண்கண்ட
சாட்சியங்களே..!

பொருட்களில்
தொடங்கிய
(USE AND THROW )
கலாச்சாரம் இப்போ
மனிதர்களின் வாடிக்கையும்
வேடிக்கையுமாகிவிட்டது.

எல்லோரும்
நல்லவர்கள் என்று
எண்ணுவது தவறில்லை
எல்லா நேரமும்
நல்லவர்களாக இருப்பார்களா
என எண்ணிக் கொள்வது..?

காலம் பெரிது
வாழும் காலம் சிறிது..!
12.11.21.

ஆக்கம் கவிஞ‌ர் தயாநிதி