*******வேர்களின் வலி*********

ஊர்-கூடித்தேரிழுத்தோம்
ஓர் காலத்தில் நாமெல்லாம்.
வேர்களாய் விழைந்து நின்றது
போர் வீரர்கள் தான் அங்கே.
போர் மூண்ட வேளை எத்தனையோ
பேர்மாண்டு மானத்தோடு மண்ணாகினர்.
பார் புகழும் பயமறியா பண்டைக்கால,
ஓர்மாபெரும் வீர இனம் தமிழரே.
நேர்வழியில் எதிரியால்,எம்மோடு போர்தொடுக்க இயலாமாயையால்,
வேரறுக்க விழைந்தான் எம்மினத்தையே,
சார்புக்கு பல தந்திரிகளை இணைத்தான் ,
போர்சாணக்கியம் என்னும் போலிப் போர்வையை உலகுக்கு விரித்தான்.
தேர் இழுத்துத் தரிசித்த எங்களின்
ஊர்த்தெருவெங்கும் உயிர்ப்பலியிட்டான்.
போர்-முடிந்து போனது என்றாலோ .
பாருக்குப் பாசாங்குப் பறையடித்தான் .
கார்-காலம் கழிந்ததினி நாம்
ஓர் தாய் மக்களானோம் என்றான்.
வேர்-களின் வலியும் வேதனையும்
போர் விளை நிலத்துக்கே தெரியும்.
வீர நேசன்