Breaking News

மேகம் வரையும் ஓவியம்!கவிதை மீரா,ஜெர்மனி

 

தரை தொடா மேகம்
நிலம் தொட்டு
ஓவியம் வரைய
பளிங்கு மழை சிதறலில்
பாசத்தை அள்ளித் தெளிக்கும்
ஆர்வம் அலை மோதும்
பூவாய் மொட்டு மலரும்
புன்னகைக்க காத்திருக்கும்
முத்தாய் வியர்க்கும்
பனித்துளி மறைவில்
கண்ணீர்த் துளி
கவனமாய் மறைக்கும்

ஆக்கம் மீரா , ஜெர்மனி

leave a reply