Breaking News

என்னோடு பேசும் மரம்….!கவிதை சுபாரஞ்சன்

 

தளைத்த கிளைகளில்
மொட்டவிழ்ந்து
நெருங்கிப் பூத்து
நிறைத்திருக்கு என் முற்றத்துமரம்

மரமாகவே பூத்திருக்கும்
இந்த வெள்ளையலங்கார மரத்துக்கு
நல்ல மனசுண்டு போலும்

கொத்துக் கொத்தாய் பூத்த
மரமல்லி கொண்டு வரும்
தென்றலில்
சுண்டியிழுக்கும் சுகந்தமிருக்கும் எனச் சொல்வது கேட்டிருக்கும் போல

வா என்னருகில் வா
என அழைக்கிறது
வாசமில்லையென்றாலும்
அருகில் வந்து
அள்ளிச் சூடவில்லையென்றாலும்
மனம்விட்டுப் பேசிவிட்டு போ
உன் மனசும் பூக்கும் என்கிறது…..

ஆக்கம்  சுபாரஞ்சன்

leave a reply