Breaking News

வசந்தம் !கவிதை சுபாரஞ்சன்

இருள் சூடும்
முகங்களில்
இளவேனில் வந்து ஒளி வீசும்
இதமான தென்றலில்
மணம் வீசும்….

கூடியிருந்து குருவிகள் பேசிக்கொள்ளும்
தளிர் தாங்கும் செடிகள் கூட தலையசைக்கும்…..

சிலிர்க்கின்ற சித்திரையில்
கனத்த காற்றும் பலத்த மழையும்
முன்னிரவுப் பனியும்
முட்டி மோத
மலர்கள் என்ன செய்யும்….

சுகம்தர முடியா வசந்தக் குளிரில்
கூதல் காயும் மனம்
என்ன செய்யும்
குவளைத் தேனீரே
சுகம் என்று
சோர்ந்து கொள்ளும்……

ஆக்கம்  சுபாரஞ்சன்

Merken

leave a reply