Breaking News

நினைவுகளோடு!!கவிதை அ.பவளம் பகீர்

 

தனிமையில் அல்ல
நினைவுகளோடு தானே
நிதம் பேசிக்கொள்கின்றேன்..
நொடிகளை கனமாக்கி
இதயத்தை ரணமாக்கும்
பிரிவுகள் இனி வேண்டாம்,
விழிகளை குளமாக்கிடும்
வலிகளும் எதுவும் நெருங்கிவிடாதே..
நிரந்தரம் இல்லையென்றாலும்
நீளாத இதுவும்
என்ற ஏக்கங்கள் தானே
நீண்டுகொண்டே போகிறதே..
காலப் பெருவிழி
கணங்களை விழுங்கிக் கொள்கிறதே
தினம் மனமதின்
தேடல்களும் தொடர்கின்றதே
நகர்ந்திட முடியாத
அன்பெனும் சிறைப்படுத்தலுக்குள் தானே
ஏனோ மனமது சிக்கித் தவிக்கிறதே…..!!

விழி வழி வழிந்தோடும் நீர்த்துளிகள்
நதிக்கரையோர நாணலையும் சாய்த்துவிடுகிறதே..!

அ.பவளம் பகீர்.

leave a reply