Breaking News

என்னவளே!கவிதை தனுக்குட்டி

 

என்னவளே………
என்னவளே!
பாசத்தின் சுரங்கமே
அன்பின் அகராதியே
என் கவிதையின் உயிர்மூச்சே
என்னைக் கொள்ளை கொண்ட
பௌர்ணமியின் ஒளியே!
மெல்ல நீ வாடினால்,
வேகுதடி என் மனசு
கொஞ்சமாய்…….
கோபம் கொண்டால்
கருகுதடி என் கனவு
தவறு நான் செய்தால்,
தண்டனை தந்துவிடு
என்னைத் தவிர்த்து,
தவிக்கவிட்டு….
மனதை சாய்க்காதே செல்லமே நீ பேச மறந்தால்
என் சுவாசமே நின்று போகுதடி
நீ நேசித்த நொடிகள் ……
என் வாழ்வின் வலி மறந்து
சுகம் சுமக்கும் யுகங்கள்.
உன் பார்வை பட்டாலே….
பல பட்டாம் பூச்சிகள்
தன் இறகில்
எனைச் சுமந்து
உனக்குள் தொலைக்குதடி
அது புது உலகம்,
புதிய வாழ்க்கை,
மானிடன் இல்லாத
மாபெரும் தேசம்- அங்கே
நீ மட்டும் என்னோடு,
நாமாக மாற….
உன் காதலில் கட்டுண்டு
என் கரங்களுக்குள் சிக்குண்டு
உதடுகள் ஊமையாகும்
உள்ளங்கள் பேசும்
காதலின் மொத்த வடிவம் நீ
காம தேவனின் கை வண்ணம் நீ
என் முத்தம் தின்று
நீ என்னைக் கொன்று
உன் மூச்சுக்கள் உருவாகி
உயிர் தந்து என் உலகானாய் .
என்னவளே!
என் மனம் உன்னிடம்
வேண்டுவதெல்லாம் ……
என் ஆயுள் எல்லாம்
நீ என்னோடு வேண்டுமடி.

தெய்வம் எல்லாமே ,
வேண்டினால் வரம் தரும்
என்னுயிரே மனதறிந்து
வரம் தருவதினால்
தெய்வத்திலும் உயர்வடா
நீ எனக்கு என்றாயே
என் உயிரில்
உறையுதடி உன் பேச்சு .

உன் மனம் சோரும் நேரம்
என் உணர்வுகள் எல்லாம் பாரம்
நொடி நேரம் நீ நொந்து போனால்
இதயமே இருளாகி,
இயங்க மறுக்குதடி
என் தாய் என்று தாலாட்ட
என் தாயும் நீ இல்லை
என் தாரம் என்று நீ தலை கோதிட
விதி என் பக்கமில்லை
ஆனால்….
என் உயிர் உள்ள வரை
உன்னோடு நான் இருப்பேன்
என் உணர்வின் உறவாக
நீ வாடிப்போனால்….
முளுமதியை மூடிய கருமுகிலாய்
இருண்டு போகிறது என் மனசு
கலங்காதே கண்ணே!
காலம் கூடிவரும்
கனவுகள் மெய்ப்படும்
கடலலையாக…..
ஓயாத உன் நேசமும்
தீராத என் தேடலும்
நம் வாழ்வின்
வெற்றிக்கு வழிகாட்டும்……!!

ஆக்கம் தனுக்குட்டி

leave a reply