Breaking News

திரைப்படவிழாக்களில் மன்மதன்

என் பெற்றோர்,என் உறவினர்கள், என் மனைவி பிள்ளை, என் நண்பர்கள் மற்றும் நான் நடித்த படங்களில் பணிபுரிந்த இயக்குனர்களுக்கும் சக கலைஞர்களுக்கும், என் ரசிகர்களுக்கும் என் இருகரம் கூப்பி வணங்கி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரஞ்சு திரைத்துறை இரு இமையங்கள் இயக்குனர்களாகிய Olivier Nakache & Éric Toledano இதுவரை 5 முழுநீள திரைப்படம் தற்போது
6வது திரைப்படமானது „Le sens de la fête“ இயக்கி இருக்கின்றார்கள்.
திரைப்படவிழாக்களில் பலதரப்பட்ட விருதுகளும் . பல்வேறு திரைப்படவிழாக்களில் விருதுக்கு தெருவாகியதும் என இவர்களது திரைப்படங்கள் இருந்திருக்கின்றது.
உலக புகழ்பெற்ற இயக்குனர்களாக திகழ்கின்றார்கள்.
இவர்கள் இருவரும் தற்போது இயக்கிய படம் „Le sens de la fête“ எதிர்வரும் 04/10/2017 அன்று திரைக்குவருகிறது…
26/04/2017 அன்று படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் திரையிட்டு காண்பித்தார்கள்.
படம் முடிவடைந்த பின்னர் அமோக வரவேற்பையும் பாராட்டுகளுளையும் கேட்டதும் பார்த்ததும் என் உள்ளதில் ஒருகணம் கண்கசிய வைத்தது… ஆனந்தம்,சந்தோஷம், மனம் மகிழ்ந்தது.
இதுவரை நான் பட்ட கஷடங்கள்,அவமானங்கள்,தோல்விகள்,பலரது பின்புற பேச்சுக்கள்,நக்கல் நையாண்டி, இவைகளால் ஏற்பட்ட கண்ணீர்கள் போன்ற அனைத்தும் அவ்விடத்தில் நினைவுக்கு வந்துபோனது…
திரைப்படம் திரையிட முன்பு மனதில் பதட்டம் நடித்த காட்சிகள் இருக்குமா அல்லது வெட்டி இருப்பார்களோ என மனம் ஏங்கியது,
நான் நடித்த காட்சிகள் அனைத்தும் வந்திருக்கின்றது, படம் முழுவதும் இடை இடையே இறுதிவரை வருகிறேன்.
நண்பர் அன்புத் தோழர் அங்கிளுடன் தமிழில் பேசி நடிக்கும் காட்சிகளும் வருகிறது, நண்பர் கேசவனுடன் நடிக்கும் காட்சியும் வருகிறது,
இத்திரைப்படம் பிரஞ்சு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப்போவது உறுதி அந்தளவு நகைச்சுவை சார்ந்த பிரெஞ்சு திரைப்படம்.
உங்கள் உங்கள் நாடுகளில் திரைக்கு வரும்போது சென்று பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்…

எனது முதல் பிரெஞ்சு ரசிகை Olivier Nakache
The brother of the actress and director Géraldine Nakache

leave a reply