Breaking News

***பாட்டியின் பட்டு **கவிதை சீலைநேசன்

பார்ட்டிக்கு சேலை வாங்கியே ஆண்கள்
-பாவம் பரதேசம் போகும் காலமிது.
போட்டிக்கு சேலை கட்டும் பெண்களின்
-பொல்லாத ஆசைகளை என்சொல்வேன்.
வீட்டுக்கு ஒரு விசேடமென்றால் அன்று
-விழாவெடுத்து புதுசு பூண்ட காலம் போய்.
பூட்டி வைக்கவென்றே பொழுதோடு போய்
-புதுச்சேலை வாங்கும் புது நாகரீகமாச்சே.
பெட்டி நிறைய புத்தம் புதுசாய் அடுக்கிய
-பெரிய விலைப்பட்டுகள் கிடந்தாலும் என்
பாட்டிக்கு வாங்கிய பருத்திநூல் சேலையை
-பாஷன் என்று பறிக்கும் பெண்ணினமே.
பார்ட்டியை பாஷனாக்கிய புலவு நாடே
-புலம்பும் உன் புத்திரர் கதை கேளாயோ.
சீலைநேசன்(நொந்தநேசனுடைய சொந்தத் தம்பி)

leave a reply