Breaking News

8 வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கூட்டாளிஇயக்குனருக்கான ( Best Director ) விருது

இன்று 8 வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கூட்டாளி திரைப்படத்திற்கு „சிறந்த இயக்குனருக்கான“ ( Best Director ) விருதினைப் பெற்றுக் கொள்கின்றார் ஈழத்து இளையவரான நிரோஜன். வாழ்த்துக்கள் நிரோஜன்.

„இந்த விருதினை ஈழத்து பிரபல பாடகர் உயர்திரு அமரர் S.G சாந்தன் அண்ணாவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன். அதனோடு இந்த விருது கிடைக்க காரணமாயிருந்த எனது படக்குழுவினருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் விருது பெறும் சக படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.“ என்கின்றார் நிரோஜன்

இளந்தமிழரான இவர் இயக்கிய „கூட்டாளி“ என்ற திரைப்படம் தமிழகத்தில் ஈழ தமிழர்களின் எழுச்சியை படம் பிடித்து காட்டுவதால் விடுதலை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ததால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உலக தமிழர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி தமிழகத்தில் பல நடிகர்கள், கலைஞர்கள், இனஉணர்வாளர்களும் வரவேற்று இருக்கின்றார்கள்.

இந்த திரைப்படம் ஒரே சமயத்தில் பல நாடுகளில் திரை அரங்குக்கு வருகின்றது. தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளான ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், லண்டன் ஆகிய நாடுகளில் எதிர் வரும் மே மாதம் கூட்டாளி திரைப்படம் திரையிடப்படுகிறது.

#ஆஸ்திரேலியாவில் கூட்டாளி..
#Date– Saturday 06.05.17
#Time– 5.00 pm
#Address – St. Anthonys Church hall
27, Aurelia Street, Toongabbie, Sydney, NSW 2145, Australia

#ஜெர்மனியில் கூட்டாளி..
#Date- Sunday 07.05.17
#Time- 1.45 pm
#Address – Stuttgart,
DELPHI KINO, Tubingerstr,

#டென்மார்கில் கூட்டாளி..
#Date- Sunday 07.05.17
#Time- 2.00 pm
#Address – BIO theatre,
Kattebjerg 5, 4700 Naestved, Denmark

#லண்டனில் கூட்டாளி..
#Date- Sunday 04.06.17
#Time- 4.00 pm
#Address – Crystal Club Ltd Hall,
1,Poppin Building, Southway, Wembley, Middlesex HA 0HB, London

கூட்டாளி திரைப்பட இயக்குனர் நிரோஜன் வயதில் சிறியவர் என்றாலும் இனஉணர்வோடு அவர் ஆற்றி வரும் செயல்கள் யாவும் உயர்ந்தவை. தன்னுடைய ஓய்வு நேரங்களை தாயக கடன், தேசிய உணர்வு செயல்பாடுகள், மொழி சார் நிகழ்வுகள் மற்றும் அநாதரவான சிறுவர் இல்லங்களில் செலவிடுகின்றார்.

எளிமை, ஆற்றல் கொண்ட நடிகர்களான விஜய் சேதுபதி போன்ற திரை நடிகர்களின் தோழமை, அறிவுமதி அவர்களின் பாசறை போன்ற பல கலைஞர்களின் நேரடி வழி நடத்தலும் இவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம் என நம்புகின்றேன்.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் தமிழ் தேசிய மக்கள் எழுச்சி பயணங்களிலும் தன்னை தமிழனாக இணைத்து பயணித்து வருகின்றார்.

மாற்று திறனாளிகளை ஆதரவற்ற சிறார்கள் என பல மக்களுக்கு தன்னாலான உதவிகளை ஆற்றி வரும் மாந்த நேயம் கொண்ட இந்த இளம் இயக்குனர் மென் மேலும் வளர்ச்சி பெறவும் வெற்றிகளை குவிக்கவும் வாழ்த்துக்கள்.

தனது இதயத்தில் தேசிய தலைவரையும் தேசிய கொடியையும் தமிழீழ தாயகத்தையும் அன்னை தமிழ் மொழியையும் முதன்மையாக வைத்து பயணிக்கும் ஒரு இளையவர் என்ற வகையில் அவரது திரை துறை கலை பயணத்தின் வெற்றி அனைத்து தமிழ் தேசிய மக்களுக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்கும் என்பது உறுதி.

Merken

leave a reply