Breaking News

!!!சொல்ல மறைத்த காதல்!!!கவிதை ஊமைநேசன்

 

பாட்டாம் பூச்சியாய் பறக்கும் என் மனம்
_பதட்டத்தில் இன்று பரிதவிப்பதேனோ.
பட்டப்படிப்பை படிக்கப்போகும் எனக்கு
_பாதியிலேயே அவள்பார்வைபட்டதேனோ.
எட்டாம் வகுப்பிலேயே எழுந்த காதலிது
_எனக்குள்ளேயே ஐந்தாண்டு வாழ்ந்தது.
கட்டம்கட்டமாக வளர்ந்த காதலையின்று
_கட்டாயம் கட்டவிழ்த்து காட்டவே முடிவு.
திட்டப்போறாளோ என்றொருமனம் திட்ட
_திக்குமுக்காடியபடி தெருவோரம் நிற்க.
கூட்டமாக தோழிகளோடு வருபவள் இன்று
_குனிந்ததலையும் குழம்பிய நடையுடன்.
கொட்டகொட்ட விழித்த நானும் இந்த
_கோதாரிக்காதல் ஏனென நொந்தேன்.
சட்டைப்பையில் கிடந்த கடிதத்தை
_சாரளமாக நீட்ட முனைகையில்.
தட்டுத்தடுமாறி.அவள் என்னை ஒரு
_தலையாய்க் காதலித்ததாகவும்.
திட்ட வட்ட மாக தான் இப்போ யாரையோ _திருமணம் செய்ய போவதாக வும் கூறி
நட்ட நடு வீதியில் என்னைக்கொன்று
_நரகத்தில் வீசி எறிந்தபடி நடந்தாள்.
கவிதை ஆக்கம் ஊமைநேசன்

leave a reply