Breaking News

கலங்காதே மனமே…!கவிதை.ரதிமோகன்

 

வானம் தெளிவாய் நீலமாய்
பரந்து விரிந்து கிடப்பதை (ப்)பாராய்
கலைந்துபோன முகில்கள்
இடையிடையே இடிமின்னல்கள்…

சூரிய தேவனின் அக்கினிக்கரங்கள்
சுற்றி வளைப்பிற்குள் துவளாது
நிலாவினை தன்னோடு அணைத்து
நிமிர்ந்து நிற்பதை நீ பாராய்..

வானத்தைப்போல பரந்த நின் மனமோ
பாணங்களால் துவண்டும் சிதறுண்டும்
கானகத்தில் தனித்த போன மானாக
கலங்குவதும் தவிப்பதுவும் முறையா?

மெய்யன்பென்றும் மெய்யுறவென்றும்
மாயையெனும் போர்வையை தவிர்த்து
மெய்யுரைத்து பொய்கையில் மலர்ந்த
செந்தாமரையாய் இறை துணையோடு
மண்போற்ற விண்தொட்டு எழுந்திடு..

மனதினில் நம்பிக்கையின் ஒளி
துளிர்த்து தழைத்து பெருவிருட்சமாகும் நாள்
விண்ணவர் பூமழை பொழிந்திருக்க
நின் கனவுகள் மெய்ப்படும் திருநாள் அந்நாள்…

ஆக்கம் ரதிமோகன்

leave a reply