Breaking News

யாழ். கம்பன் விழா இரண்டாம் நாள் 24.06.2017 மாலை நிகழ்வுகள்

யாழ். கம்பன் விழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகள் 24.06.2017 மாலை 4.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.
.
சாவகச்சேரியூர் வி.சித்தார்த்தன், வி.பிரதித்தன் குழுவினரின் மங்கல இசையைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி ச.ஏகநாதன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். கலாநிதி ஸ்ரீ.தர்சனன் கடவுள் வாழ்த்து இசைத்தார். வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தொடக்கவுரையாற்றினார்.
.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில் அறத்தடுமாற்றத்தால் அதிகம் உழன்றவன் யார் என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. தசரதனே என அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த தி.திருநந்தகுமாரும் தமிழ்நாடு த.ரெங்கராஜனும் வாதிட்டனர். மாரீசனே என தமிழநாடு புலவர் இரெ.சண்முகவடிவேல், வலம்புரி ஆசிரியர் ந.விஜயசுந்தரம் ஆகியோர் வாதிட்டனர். கும்பகர்ணனே என தமிழ்நாட்டு பேராசிரியர் வி.அசோக்குமாரன், கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் ஆகியோர் வாதிட்டனர்.

Merken

leave a reply