Breaking News

கலைந்துபோன கனவுகள்…..!

இளங்காலையிலேயே ஆதவன் தன் வெப்பக்கரங்களை பரப்பி பூமாதேவியை நோக்கி தன் பார்வையை செலுத்தினான். ஆலயத்துமணியின் நாதம் மெல்ல காற்றினிலே பரவி கிணு கிணுக்க, அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த அந்த சின்னஞ்சிறியப்பறவை „கீச் கீச்“ என்ற ஒலியுடன் சிறகுகளை விரித்து மேலெழுந்து பறந்தது.அது தன் தாயைத்தேடி அழைத்ததோ ?இல்லை விடியலுக்கு ஒரு இராகம் இசைத்ததோ.. ?நிசப்தமான பொழுதில் அழகாக குருவியின் கானம் ஒலித்தது..காலையின் இளம்வெயில் பாரதியின் மேனியைத்தொட்டு அணைக்க அம்மாவின் குரல் அதட்டலாக “ பாரதி இவ்வளவு நேரமும் என்ன தூக்கமோ.. எழும்பம்மா … போற இடத்திலை இப்படியாத்தூங்கப் போறாய்“ இது தினசரி வீட்டில் கேட்கும் அம்மாவின் சுப்ரபாதம். „ச்ச் “ என சப்பு கொட்டியபடி கட்டிலை விட்டு நகர மனமின்றி மனதிற்குள் “ ஏன்தான். இப்படி இந்த அம்மாக்கள்??? கட்டி அனுப்புறதிலையே குறியாய் இருக்கிறாங்களே“அலுத்தபடி குளியல்அறைக்குள் நுழைந்தவேளை அங்கு ஓடிவந்த தங்கை குளியலறை கதவைத்தட்டியபடி சொன்னாள் “ அக்கா அக்கா ஏ எல் ரிசல்ட் வந்துவிட்டதாம் கெதியாய் வாயேன்“ பாரதியின் மனம் ஒரு கணம் திக் என்றது.
(தொடரும்)
ஆக்கம்  ரதிமோகன்

Merken

Merken

leave a reply