Breaking News

கல்லறை வேந்தர்கள் !கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

 

இது மறக்கமுடியாத தலம்
இது மறந்து விட முடியாத இடம்
இது மகாத்மாக்கள் வாழும் புனித தலம்
இது மனதிலிருந்து நீங்காத நினைவுத்தடம்
இது தமிழர்களின் தேவாலயம்
இது தடம் தெரியாமல் அழித்தாலும்
மனங்களிருந்து அழியாத உயிர்த்தடம்

விதையாய் புதைந்த
வீரர்களுக்கு விருட்சங்கள்
நிழல் கொடுக்கின்றது

நிமிர்ந்து வாழ வழி செய்த வானோர்கள்
இடத்தில்
நிமிர்ந்து நிற்கின்றது மரங்கள்

தமிழீழத்தின் கொள்ளை அழகாய்த் திகழ்ந்த
தரவைத் துயிலும் இல்லம்
இன்று அடையாளம் தெரியாதது போன்று
அழிக்கப்பட்டுக்கிடக்கின்றது
மக்கள் உறுதி பூண்டால்
முன் போன்று அழகாகும் என்ற நம்பிக்கை
அளவின்றி இருக்கின்றது

கருஞ்சோலை வனப்புடன்
கல்லறை வேந்தர்கள்
கண்ணுறங்குகின்றார்கள்
ஈழத்தாயின் கருவறைக்குள்
குடும்பி மலைத்தேவன்
குலங்களை காத்தவர்களுக்கு
அருள் கொடுப்பான்

மாண்டவர்கள் அல்ல இவர்கள்
ஆண்டுகொண்டு இருப்பாவர்கள்
சாவிலும் சரித்திரம் படைத்தவர்களின் சந்நிதி இது
மறைக்கப்பட வேண்டு என்று
அழிக்கப்பட்டுக்கிடக்கின்றது
எங்கள் இதய பூமி

 ஆக்கம்  -மட்டுநகர் கமல்தாஸ்

leave a reply