Breaking News

***கூரிய விழியம்பு***கவிதை விழிநேசன்

நில்லாதே என்முன்னே
நில்லாதே பெண்ணே
நிஜமாகவே நானும்
நிலைகுலைந்து போகிறேன்!!!
.
சொல்லாதே என் பெயரைச்
சொல்லாதே உன் வாயால்
சோர்ந்து போய் எனோ
சோகமாகிறேன் அன்பே !!!
.
கிள்ளாதே நெஞ்சை வீணே
கிள்ளாதே கிளியே
களைத்துப் போகிறேன் உன்
கனவுகளால் நானும்.!!!
.
கொல்லாதே எனைக்கொல்லாதே
கொடிய விடம் கொண்ட
கூரிய விழியம்பால் எனை
கொல்லாதே கண்ணே!!!
.
ஆக்கம்  விழிநேசன்

leave a reply