Breaking News

பிரான்சு தேசத்தில்“தனிப்புறா“எழுதி,இயக்கிய ஞானம் பீரிஸ்

புலம் பெயர் ஈழத்தமிழர் வரலாற்றில் பிரான்சு தேசத்தில் இருந்து முதன்முதலாக „தனிப்புறா“ என்ற தமிழ் வீடியோ படத்தை தயாரித்து,எழுதி,இயக்கிய
வரலாற்று கலைமகன் திருமிகு ஞானம் பீரிஸ்
அவர்கள் எழுதி, ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின்
„சிறுவர் பூங்காவில்“ மலர்ந்த
„ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“
„நூல் வெளியீடு“ பிரான்ஸ் ஒபேர்வில்லியர்ஸில்
25.06.2017 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக
நடைபெற்றது.
அந்த நிகழ்வில் ஐரோப்பாவின் முதல் தமிழ்
வீடியோ திரைப்படம் „தனிப்புறா“ வை (1983)
உருவாக்கிய திருமிகு ஞானம் பீரிஸ் அவர்களுடன்,
„தனிப்புறா“ திரைப்பட மூலம்,முதல் துணை
கதை,வசன கர்த்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட
„ஈழத்தமிழ்விழி“ கவிஞர் வண்ணை தெய்வம்
அவர்கள், „தனிப்புறா“ திரைப்பட மூலம்
ஐரோப்பாவின் முதல் தமிழ் வீடியோ திரைப்பட
ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தப்பட்ட
அறிவிப்பாளர்,நடிகரான „பிரியாலயம்“துரைஸ்,
மற்றும், ஐரோப்பாவின் இரண்டாவது தமிழ்
வீடியோ திரைப்படமான „நீதியின் சோதனை“ (1984)
மூலம் ஐரோப்பாவின் முதல் தமிழ் வீடியோ திரைப்பட
ஈழத்து கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட,நடிகை,
வானொலி அறிவிப்பாளினி திருமதி வளர்மதி துரைஸ்.
ஆகியோர் சந்தித்த போது, மறக்க முடியாத புகைப்படம்.

 

இணைப்பு „அசோத்ரா கலைஞர்கள் சுற்று“

leave a reply