Breaking News

~~~ஊராசை~~~

ஊருக்கு போக வேணுமெண்டு ஆசை,
உற்றாரை கண்டு மகிழ நல்ல ஆசை.
உச்சி வெயிலால் வேர்த்திட ஆசை,
உப்புத்தண்ணியில குளித்திட ஆசை .
உயர மரத்திலேறி ஊரைப்பார்க ஆசை,
ஊஞ்சல்கட்டி உறவுகளோடு ஆடிட ஆசை.
ஊர்த்திருவிழாவை நேரில் பார்க்க ஆசை,
ஊரரிசியில பொங்கிப்படைக்க ஆசை.
உலக்கை கைமாத்தி மாவிடிக்க ஆசை ,
உறைப்பாயொரு கூழ்காச்சி குடிக்க ஆசை.

ஊறுகாயோடு பழஞ்சோறு தின்னஆசை,
உழுத்தங்கஞ்சி சிரட்டையிலகுடிக்க ஆசை.
ஊரெல்லாம் சைக்கிளில் சுத்திட ஆசை,
உறவுகளைக்கண்டு தலையாட்ட ஆசை .
ஊரோடையில் விழுந்து நீச்சலடிக்க ஆசை,
ஊசிக்கணவாயை சுட்டுத்தின்ன ஆசை .
உழுதவயலிலிறங்கி ஓடிவிளையாட ஆசை,
ஊர்ந்தோடும் புத்துநண்டை பிடிக்க ஆசை.
ஊருக்கு வெளியே ஒழிந்து போக ஆசை ,
உடன் கள்ளிறக்கி ஊதிக்குடிக்க ஆசை .
ஊருப்பட்ட அசைகளை சொல்லிட ஆசை,
உங்களுக்கும் ஆசைகளை தூண்டிட ஆசை.
~
ஆசை நேசன்

leave a reply